துருக்கியில் ஆட்சி கவிழ்ப்புக்கு சதி - 253 பேருக்கு தண்டனை
துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் தலைமையில் பல வருடங்களாக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி மூலம் இவரது கட்சியை கவிழ்க்க சதி நடந்தது.
இந்த சதிதிட்டம் முறியடிக்கப்பட்டது. அதில், அப்போதைய ராணுவ தலைமை தளபதி இல்கர் பஸ்பக் தலைமை வகித்தார்.
அதை தொடர்ந்து தலைமை தளபதி பஸ்பக், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட 275 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது இஸ்தான்புல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், முன்னாள் தலைமை தளபதி இல்கர் பஸ்பக்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தவிர மேலும் 253 பேருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இவர் தவிர நிருபர் துன்னே ஓஷிகள், வக்கீல் லகமல் கெரிங்குஷ் உள்ளிட்டோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் முஸ்தபா பல்டே மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு 34 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
Post a Comment