Header Ads



20 டாக்டர்கள், 10 மணி நேரம் ஆபரேஷன் - ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு

சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. 

இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக பிறக்காமல் 2 குந்தைகளும் ஒட்டிப் பிறந்ததால் அவை எத்தனை நாள் உயிருடன் இருக்குமோ...? என்ற கவலை யுவே ஜூக்சிங்கின் இதயத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 

2 குழந்தைகளையும் ஆபரேஷன் மூலம் பிரித்தெடுக்கலாம். ஆனால், அதற்கு நிறைய செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதற்காக தெரிந்தவர்களின் மூலம் இணையதளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு நிதியுதவி செய்யுமாறு யுவே ஜூக்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மளமளவென 1 லட்சம் யுவான் வரை (இந்திய மதிப்புக்கு சுமார் 10 லட்சம்) நிதி குவிந்தது. ஆபரேஷனை இலவசமாக செய்ய குவாங்க்சி மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியும் முன்வந்தது. 

இதனையடுத்து, ஈரலின் மூலன் ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க கடந்த 8ம் தேதி ஆபரேஷன் நடைபெற்றது. 20 டாக்டர்கள் உழைப்பில் சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனில் 2 குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன. 

ஆபரேஷனுக்கு பிந்தைய 3 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்று தாயுடன் சேய்களும் நலமாக வீட்டை சென்றடைந்தனர்.

No comments

Powered by Blogger.