Header Ads



ஹஜ்ஜில் புரியப்படும் முக்கிய தவறுகள் பகுதி 2 - ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 27)

அபூ நதா

1) இஹ்ராம் அணிந்த பின் மாதவிடாய் ஏற்படும் பெண்கள்  கஃபாவை வலம் வருவது கூடாது.  உதிரப்போக்கு தடைப்பட்டதும்  குளித்து தூய்மையாகி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் போன்று விடுபட்ட தமது ஹதவாப்' மற்றும் ஹஸஃய்' கடமைகளைத் தொடரலாம். 

2) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுடன் பாதுகாப்பிற்காகச் சென்ற அவர்களது சகோதரர் அப்துர்ரஹ்மான் (வ) அவர்கள் இரண்டாவது உம்ராச் செய்தார்களா என்றால் இல்லை.

3) மக்கா வெற்றியின் போது அங்கு பதினெட்டு நாட்களுக்கு மேல் தங்கி இருந்த நபி (ச) அவர்களோ, அவர்களின் தோழர்களோ  இரண்டாவது உம்ராவிற்காக   ஆயிஷா மஸ்ஜிதில் இருந்து  ஹஇஹ்ராம்' அணிந்து வரவில்லை. மட்டுமின்றி அப்படி ஒரு மஸ்ஜித்  நபி (ச) அவர்களின் காலத்திலோ, அவர்களின் தோழர்களின் காலத்திலோ  இருக்கவில்லை. இந்நிலையில் அதில் இருந்து பல உம்ராக்களுக்காக எவ்வாறு  இஹ்ராம் அணிந்திருப்பார்கள்?  

4) ஹஹஜ்' ஹஉம்ரா' வணக்கம் பற்றிக் குறிப்பிட்ட நபிகள் நாயகம் (ச) அவர்கள் لتأخذوا عني مناسككم (مسلم) ஹஎன்னில் இருந்து உங்கள் ஹஜ், உம்ராக் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள். (முஸ்லிம்).  எனவே, வணக்க வழிபாடுகளில் அவர்கள் எதைச் செய்தார்களோ அதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யவில்லையோ அதைச் செய்யக் கூடாது. அந்த அடிப்படையில் ஒரு பயணத்தில் பல உம்ரா  முறை அவர்களின் வழிமுறைக்கு அப்பாற்பட்டதாகும். 
 ஒருவர் விரும்பினால் உம்ராக் கடமை முடிந்ததும் நபிலான வணக்கங்கள் செய்வது போன்று பல தவாஃப்கள் செய்வதற்கு நபி (ச) அவர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள் (திர்மதி, நஸயி) அந்த அடிப்படையில் நபிலான பல தவாஃப்கள் செய்து கொள்ளலாம். அதற்காக இஹ்ராம் அணிய வேண்டும், ஏழுமுறை சுற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகள் எதையும் ஹதீஸ்களில் நாம் காணவில்லை. 

3- ஹனஃபி மத்ஹபுக்கு மாறுதல்.

மக்காவில் பெண்கள் பட்டால் உழு முறிந்து விடும் நிலை ஏற்படுவதால் ஹனஃபி மத்ஹபிற்கு மாறிக் கொள்ளும் நிய்யத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றும் மௌலவிகள் போதனை செய்கின்றனர்.

பெண்கள் வுழு செய்த பின் தமது கணவரோ, மற்ற அந்நிய ஆண்களோ அறிந்தோ அறியாமலோ பட்டுவிடுவதால்; உழு முறிந்திவிடுவதாக நம்பி, மீண்டும் வுழு செய்வதைப் பார்க்கின்றோம். உழு செய்துவிட்டால் பெண்களிடம் கணவன் தீண்டத்தகாதவராகிவிடுகின்றார். ஒருவர் மற்றவரை விட்டும் ஓதுங்கிக் கொள்கின்றனர்.

நபி (ச) அவர்கள் தமது மனைவியரில் சிலரை முத்தமிட்டு, பின்னர் தொழுகைக்கு சென்றுள்ளார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியபோது நீங்கள்தானே! அவர் எனக் கேட்கப்பட்;ட போது சிரித்தார்கள். (திர்மிதி, இப்னுமாஜா).

அதற்காக உழு செய்த பின் மனைவியை முத்தமிடுவது சுன்னத் என விளங்கிவிடக் கூடாது, இப்படி ஒன்று நடந்தால் அதற்கான மார்க்க சட்டம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த நடைமுறை. 

குறிக்கீடு: அல்குர்ஆன் வுழு, மற்றும் தயம்மும் பற்றிக் குறிப்பிடும் போது ஹ பெண்களை நீங்கள் தொட்டால் தண்ணீரையும் பெற்றுக் கொள்ளவில்லையானால் தூய்மையான மண்ணை நாடுங்கள்' (அந்நிஸா:43) (அல்மாயிதா: 06)   எனக்குறிப்பிட்டுள்ளதே! அதன் விளக்கம் என்ன? 

பதில் மேற்படி வசனத்தை காட்டி ஒருவர் பெண்ணைத் தொட்டால் ஒன்று அவர் தயம்மும் செய்ய வேண்டும், அல்லது உழு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாதம் முன்வைக்கப்படுவதைப் பார்க்கின்றோம்.

அந்த வசனத்தில் ஹலாமஸ்துமுன்னிஸாஅ' என்ற சொற்பிரயோகம் இடம் பெற்றுள்ளது. ஹலாமஸ' என்ற சொல்லுக்கு ஷாபி மத்ஹப் மௌலவிகள்தான் வெறுமெனே தொட்டால் என்ற பொருள் கூறுகின்றனர். ஆனால் இந்த இடத்தில் அவ்வாறு  பொருள் கொள்ள அந்த வசனம் இடம் தரவில்லை. ஹமனைவியரை தீண்டினால்' ஹமனைவியருடன் உடலுறவு கொண்டால்' என்ற பொருளே இங்கு பல வழிகளில் பொருத்தமானதானதாகும். இதை பின்வரும் அடிப்படைகளைக் கவனித்தில் கொண்டு சரியான கருத்தாகவும் கொள்ளலாம்.

* நபி (ச) அவர்கள் தனது மனைவியர் சிலரை முத்தமிட்டு வுழு செய்யாது தொழுதமை (திர்மிதி).
* அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி  (ச) அவர்களுக்கு குறுக்காக உறங்கிக் கொண்டிருக்க, சுஜுத் செய்த நபி (ச) அவர்கள், தமது காலால் அன்னை அவர்களை குத்தி விட்டு, தொழுகையைத் தொடர்ந்தமை (புகாரி).
* இரவில் நபி (ச) அவர்களைக் காணாத போது, அவர்களைத் துலாவிப்பார்த்த அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கை, நபி (ச) அவர்களின் இருபாதங்களிலும் பட்டிருந்தும், நபி (ந) அவர்கள் தனது தொழுகையை தொடர்ந்தமை. (முஸ்லிம்) இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தும், நபியவர்கள் உழு செய்யவில்லை என்றால் நாம் எடுத்தெழுதியதே அந்த வசனத்தின் சரியான பொருளாகும். அது மாத்திரமின்றி நமக்கு முன்னர் இப்னு அப்பாஸ் (வ) போன்ற நபித்தோழர்களும் இக்கருத்தையே உறுதி செய்துள்ளனர். 
* ஆண், பெண் மாறிமாறிப்படுவதால் வுழு முறிவதாக அதிகம் அலட்டிக்கொள்வோர் ஏற்றுக் கொண்ட ஹஹனஃபி மத்ஹப்' நாம் முன்வைக்கும் வாதங்களையே முன்வைக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.      

கேள்விகள் 27

கேள்வி – 1. மக்கா வெற்றியின் போது நபி (ஸல) அவர்கள் எத்தனை நாட்கள தங்கினார்கள்?
கேள்வி – 2;. நபி (ஸல்) அவர்கள் வீட்டில் தொழும் போது எந்த மனைவி குறுக்காக படுத்து இருந்தார்கள்?

No comments

Powered by Blogger.