மூதூர் முறாசிலின் 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1'
ஊடகவியலாளர் மூதூர் முறாசிலினால் எழுதப்பட்ட 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1' என்னும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2013.08.11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று மூதூரில் இடம்பெறவுள்ளது.
மூதூர் அல்- ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற அதிபரும் எழுத்தாளருமான ஏ.நயிமுத்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நூல்அறிமுக உரையை எழுத்தாளர் ஏ.எஸ்.உபைதுல்லாவும் (அதிபர்) நூல் ஆய்வுரையை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்இலும் நிகழ்த்தவுள்ளனர்.
நூல் வெளியீட்டு உரையை ஊடகவியலாளர் ஆர்.எப். அரூஸ் வழங்கவுள்ள அதே வேளை நேயம்,குரல் ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியர் எம்.எஸ்.எம். நியாஸின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.
விழா நிகழ்வுகளை எழுத்தாளர் ஏ.எஸ்.அப்துல்லா (ஆசிரியர்) தொகுத்து வழங்கவுள்ளார்.
Post a Comment