Header Ads



மூதூர் முறாசிலினால் எழுதப்பட்ட 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1'

மூதூர் முறாசிலினால் எழுதப்பட்ட 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1'  என்னும் நூலின் வெளியீட்டு வைபவம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

மூதூர் அல்- ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில், ஓய்வு பெற்ற அதிபரும் எழுத்தாளரும் பீஸ் ஹோம் அமைப்பின்  அலோசகருமான ஏ.நயிமுத்தீன் தலைமையில்  இடம்பெற்ற இவ்வைபவத்தில் நூல்அறிமுக உரையை எழுத்தாளர்  ஏ.எஸ்.உபைதுல்லாவும் (அதிபர்) நூல் ஆய்வுரையை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்இலும் நிகழ்த்தினர். 

நூல் வெளியீட்டு உரையை 'கிழக்கு' வார இதழின் ஆசிரியரும் பீஸ் ஹோம் அமைப்பின் செயற்பாட்டாளருமான  ஆர்.எப். அரூஸ் வழங்கினார்.  

நேயம்,குரல் ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியர்  எம்.எஸ்.எம். நியாஸ் மற்றும்; கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் ஆகியோரின் சிறப்புரையும் இடம்பெற்றது.
விழா நிகழ்வுகளை எழுத்தாளர் ஏ.எஸ்.அப்துல்லா (ஆசிரியர்) தொகுத்து வழங்கினார்.

நூல் முதல் பிரதியை முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக் பெற்றுக் கொண்ட அதேவேளை சிறப்புப் பிரதியை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் பெற்றுக் கொண்டார். 

No comments

Powered by Blogger.