சவுதி அரேபியா விபத்தில் 14 பேர் மரணம்
சவுதி அரேபியாவில் மினி பஸ் மீது லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற மினி பஸ் மீது நேற்று மாலை பாரம் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மினி பஸ் லாரிக்குள் நசுங்கி புதைந்து விட்டது.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் மினி பஸ்சின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து உள்ளே சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். 14 பேர் பிணமாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி அதிக வேகத்தில் செல்ல முயற்சிப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
16 முதல் 36 வயதுக்குட்பட்ட நபர்களின் மரணங்களில் பெரும்பாலானவை விபத்து சார்ந்த மரணங்களாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment