Header Ads



களுத்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எழும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழமையானது

களுத்துறை புலத்சிங்கள பாஹியன்கல குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எழும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழமையானதென்பது தெரியவந்துள்ளது.

ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கால நிர்ணய அறிக்கையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஹியன்கல குகையில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த மனித எழும்புக்கூடு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த எழும்புக்கூட்டினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பாஹியன்கல குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமையான எழும்புக்கூடு இலங்கையில் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் முழுமையான எழும்புக்கூடு என கருதப்படுகின்றது. NF

4 comments:

  1. அது எலும்புக்கூடு, எழும்புக் கூடு அல்ல!

    ReplyDelete
  2. அது புனித பூமி என்று வியன்கல்லையில் இருக்கும் முஸ்லிம்களை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  3. idu awarhalin thittam mohamed,

    ReplyDelete
  4. MR MOHAMED SONNATHU THAAN KOODIYA SEEKKIRAM NADAKKA POKUTHU

    ReplyDelete

Powered by Blogger.