தாருல் ஹதீத் 11வது தௌறாஹ் நிகழ்வின் பரிசளிப்பு வைபவம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
தாருல் ஹதீத் நிறுவனத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கான இலவச ஒரு வார கால கற்கை நெறிகள் அடங்கிய 11வது வதிவிட செயலமர்வொன்று(தௌறாஹ்)காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் இம்மாதம் கடந்த 15ம் திகதியிலிருந்து இன்று வரை சுமார் 07 நாட்கள் நடைபெற்றது.
அதன் இறுதி நாள் நிகழ்வும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள்,பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பன இன்று புதன்கிழமை 1.00மணியளவில் காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் தாருல் ஹதீத் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி யூ.எல்.அஹமத் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சவூதி அரேபிய அப்கா மன்னர் காலித் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் அல்மஈ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமாத் தலைவரும் காதிநீதிபதியுமான அலியார் பலாஹி,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா,அந்நஜ்ரான் பல்கலைக்கழக பேராசிரியர்கள்,உலமாக்கள்,ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 07தினங்களாக காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் இடம்பெற்ற இவ்வதிவிடச் செயலமர்வில் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 65மாணவர்கள்,20பெண்கள் அடங்கலாக 85பேர் கலந்து கொண்டதாக தாருல் ஹதீத் நிறுவனத்தின் காத்தான்குடிக் கிளைப் பொறுப்பாளர் எம்.ஏ.சீ.ஏ.நாஸர்(ஜமாலி) தெரிவித்தார்.
குறித்த வதிவிட செயலமர்வு (தௌறாஹ்) வருடா வருடம் இலங்கையில் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment