Header Ads



100 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஒருகொடவத்தையில் சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்று சுங்க பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியபோது, 100 கோடி ரூபாவுக்கும் அதிக பொறுமதியுடைய ஹெரொயின் போதைப்பொருளை கண்டுப்பிடித்துள்ளனர்.

கிறீஸ் அடங்கிய உறையினால் பொதியிடப்பட்டு இந்த போதைப்பொருள் சூட்சுமமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் மாலி பியசேன குறிப்பிட்டார். 

இந்த கொள்கலன் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் கூறினார்.

இந்த கொள்கலன் பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவநதுள்ளது.

No comments

Powered by Blogger.