பொலந்நறுவையை ஆண்ட பராக்கிரமபாகு மன்னனின் உருவச்சிலை திறப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வானிலிருந்து வருகின்ற ஒரு துளி நீரையேனும் விவசாயத்திற்கு பயன்படுத்தாது வீணே கடலை சென்றடைய விடமாட்டேன என்று கூறிய பொலந்நறுவையை ஆண்ட பராக்கிரமபாகு மன்னனின் உருவச்சிலை இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் வளகாத்தில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதீ எஸ்.பாக்கியராசாவினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ் உருவச்சிலை இலங்கை தேசிய கல்விக் கல்லூரியின் மட்டக்களப்பு தாழங்குடா கிளையின் சமூக விஞ்ஞான மன்றத்தினால் அதன் தரம் நான்கு-4 ஆண் மாணவர்களாகும் ,22 இருபத்திரண்டு பெண் மாணவிகளாளும் மற்றும் சித்திரப் பாட மாணவன் கொக்கட்டிச்சோலை தரனிதரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வரலாறு பாடத்தில் முக்கிய மன்னனாக திகழும் பராக்கிரமபாகு மன்னனை முன்னுதாரனமாக காட்டி இவ் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உருச்சிலையில் இருக்கும் பராக்கிரமபாகு மன்னன் பொலந்நறுவையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் செல்வச் செழிப்பு நிறைந்த பிரதேசமாக விருத்தி செய்தான். அத்தோடு வயலும் வயல் சார்ந்த பொலந்நறுவை பிரதேசத்தில் இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment