சட்டக் கல்லுரி முஸ்லிம் மஜ்லிஸின் இப்தாரை புறக்கணிக்க மாணவர்கள் தீர்மானம்
(அல்-மாலிக்)
இலங்கை சட்டக் கல்லுரி முஸ்லிம் மஜ்லிஸின் இப்தாரை புறக்கணிக்க முஸ்லிம் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முஸ்லிம் மஜ்லிஸின் நிர்வாக தெரிவில் இடம்பெற்ற முறைகேடுகளினால் முதலாம் வருட மாணவர்கள் தனித்து செயற்பட தீர்மானித்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத மாணவரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த சில மாதங்களாக நட்பு நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எந்த செயற்பாடுகளிலும் பங்குபற்றாது தமது எதிர்ப்பை முதலாம் வருட மாணவர்கள் வெளிக்காட்டி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வினை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, சுமார் 82 மாணவர்கள் கையொப்பமிட்ட முறைப்பாடொன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சட்டக் கல்லூரி பேரவைக்கும் சட்டக் கல்லூரியின் அதிபருக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்ல ஒற்றுமை இப்படித்தான் இருக்கணும்,
ReplyDeleteமுதலாம் வருடத்தில பிரிந்து பின் பட்டம் பெற்றதன் பின்பு
ஊருக்குள புகுந்து சமூகத்தையும் பிரிக்கணும்,
வாழ்க சட்டத்துறை~
You all people where ever go fights and qurrels for positions, jobs and money. No manners and respects with seniority and jouniors. Did you go to get study or to grasp the post in the Muslim Majlis, just think and realize, it's a society to look into your rights and benifits especially for Muslim Students while you be an inmate there for 3 or 4 years only. Do not make it big, One fact is that, Is there any internal problem inside to any other societies like you foolish? think wise what is happanning to minority in Sri Lanka?, and what do you do at the learning place now. Do not show your idiotical manners there.
ReplyDeleteஇது எவ்வளவு கேவலமான நிலை பார்த்தீர்களா ???
ReplyDeleteஎங்கேயாவது நாம் கொஞ்சம் தொகையில் கூடிவிட்டால் இந்தமாதிரி கீழ்த்தரமான வேலைகள்தான் நடக்கும். ஒருசிலரின் அற்பத்தனமான பதவி ஆசை, சுயநலத்திற்காக சட்டக் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுக்குள்ளேயே ஒருவகை குரோதத்தை வளர்த்துவிட்டுள்ளனர் ஒருசிலர்.
சென்ற வருடம்தான் முஸ்லிம்கள் அதிகமாக சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகினர். அப்படிக் கிடைத்த வாய்ப்பை ஒற்றுமையாக விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு கல்லூரிக்குள் ஒரு முன்னுதாரணமாகத் திகழவேண்டிய நமது முஸ்லிம்கள் கேவலம் பெரும்பான்மை இனத்து மாணவர்களுக்கு முன்னாள் பதவிக்காக அடித்துக்கொண்டு சாகப்பார்க்கின்றனர்.
இந்த ரமழானில் எல்லா கல்வி நிறுவனங்களிலும் போல முஸ்லிம் மாணவர்கள் இப்தார்களை ஏற்பாடு செய்து அந்நிய மாணவர்களுடனும் நட்புறவையும் ஒற்றுமையையும் வழுப்படுத்துவதுதான் வழமை.
ஆனால் இங்கே ஒரு சிலருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் முதலாம் ஆண்டிற்கு புதிதாக வந்துள்ள மாணவர்களைக் கூட்டம் சேர்த்துக்கொண்டு ஒரு உயர்ந்த அமலையும் முஸ்லிம் சகோதரத்துவத்தையும் கேவலப்படுத்தப் பார்க்கின்றனர்.
இவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவதாக இருந்தால் அவர்கள் செய்யவேண்டியது மாணவர் சமூகத்தைச் சுயநலத்துக்காக கூறுபோடுவதல்ல.
அல்லாஹ்வுக்காக முஸ்லிம் மாணவச் சமூகத்தின் ஒற்றுமையைக் கருதி விட்டுக்கொடுத்து அவர்களுடன் ஒத்துழைத்துச் செல்வதாகும். அல்லாஹ்வுக்காக என்று யாரும் செயற்படுவதாக இருந்தால் அவர்கள் செய்யவேண்டியது அதுதான்.
மாறாக ஊர் உலகத்திலும் சட்டக் கல்லூரிக்குள்ளும் இதுமாதிரி மொட்டைச் சுவரொட்டிகளை ஒட்டுவதும் செய்திகளையும் பரப்புவதல்ல.
இந்த முஸ்லிம் மாணவர்களது பிளவுக்குப் பின்னால் இருக்கும் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்னவெனில், இஸ்லாமிய வேஷம் போட்டுக்கொண்டு பெரிய உத்தமர்கள் போல நடித்துக்கொண்டு பதவி ஆசைக்காகவும் அற்ப புகழ்ச்சிக்காகவும் செயற்படும் சில இயக்க சாயம் பூசிக்கொண்ட நபர்கள் இந்தக் குழப்பத்துக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்பதாகும்.
வாயைத் திறந்தால் இஸ்லாம், அஹ்லாக், சகோதரத்துவம் என்று பேசுபவர்களுக்கு இந்த மாதிரி ஒரு கல்வி நிறுவனத்துக்குள் விட்டுக்கொடுத்துப் போக மனம் வராததுதான் பெரும் விந்தையாக உள்ளது.
நமது சமூகத்துள் இருக்கும் இதுமாதிரி தனது சுயநலத்துக்காக ஊரைக் குழப்பும் கீழ்த்தரமான மனிதர்களால்தான் நாட்டிலும் ஊரிலும் போகும் இடங்களிலெல்லாம் நமது சமூகம் அடிவாங்குகிறது.
No need to commend more than Umarali Mohameds Ismails's and Rahman Hasan's. Dear my dear students, I know you wont accept any advice but if you cant be unity, how we can expect unity in our society. One day all of you want to answer to god.
ReplyDeleteShame, as our brothers Umar Ali, Rahman Hasan and Sri Lankan indicated, the people who should stand for unity and compassion leaving some of our rights, fight for position!. Really, shame.
ReplyDelete