Header Ads



முஸ்லிம்களின் 'இப்தார்' மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுக்கிறது - சி.தண்டாயுதபாணி

(ஏ.ஜே.எம்.சாலி)

முஸ்லிம் சமுகத்தவர்களால் மேட்கொள்ளப்படும்  புனித இப்தார் கடமையானது மனிதர்களை மனிதர்கள் நேசிக்க கற்றுக் கொடுக்கும் நல்லதொரு வழிமுறைதான் இந்த இப்தார் வைபவம் என்றார் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி.

திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் 23-07-2013 கிழக்கு மாகாண அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவத்தின் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் வாழும் நாம் இங்கு பல்லின சமுகத்தவர்களாக வாழ்கிறோம் எம்மிடையே அன்பும் மனித நேயமும் இருந்திடல் வேண்டும்.அதன் அவசியம் இங்கு உணரப்படுகின்றது. உண்மைஅன்பு தான் ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுத்தருகிறது. இங்கு நாம் ஒற்றுமைப் பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கூட்டாக செயற்படும் தேவை எங்களிடம் உள்ளது. கடந்த காலங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளை அடையாளங்களாக விட்டுச் சென்றுள்ளது. அவைதான் எதிர்காலத்தை நலமாக அமைத்துக் கொள்ள வழிவகைகளை காட்டி நிற்கிறது. எனவே இங்கு ஏற்படுத்தப்படும் ஒற்றுமை நிஜமான ஒற்றுமையாக நமது வாழ்வில் மிளிர வேண்டும் என்றார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண  முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் அவர்கள் “இப்புனித மாதத்தில் பல்லின சமூக மக்களும் இங்கு கூடி இருப்பது மனதிற்கு மிக மகிழ்ச்சியான விடயம் இந்த இப்தார் வைபவத்தில் பெரிதாக நாங்கள் எதையும் வழங்கவில்லை இந்த பேரீச்சம்பழமும் இந்தக் நோன்புக் கஞ்சியும் தான். உண்மையான அன்பையும் இதயசுத்தி உடைய மக்களையும் ஒன்று சேர்க்கும் பலமாக  பாலமாக இந்த இப்தார் அமைந்து இருப்பதை கண்டு நான் மனதார இறைவனுக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இங்கு ஆளுநர் ,மத்திய அமைச்சர்,மற்றும் மாகாண அமைச்சர்கள் அதிகாரிகள் என பல தரப்பினர் இங்கு உள்ளனர்.ஆனால் இந்த இப்தாரில் இறைவன் முன் நாங்கள் எல்லோரும் சமமானவர்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.எமது வேலைப்பளுக்கள் எம்மை சில சமயம் மறந்து போகச் செய்கிறது.இறைவனின் பொறுத்ததிற்காக அமர்ந்து இருக்கும் இந்த சில நிமிடங்கள் எம்மை சிந்திக்கச் செய்கிறது. எனவே கிழக்கு மாகாண மக்கள் எப்போதும் இப்படியே ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.’

No comments

Powered by Blogger.