Header Ads



வேடுவர்களின் புத்திமதி கேட்டும் அளவிற்கு பின் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள்..!

(J.M.Hafees)

நாட்டின் தலைவர் முதல் நாடோடி வாழ்ககை நடத்தும் வேடுவர் வரை மஹியங்கனையில் பள்ளி தேவையில்லை என்று கூறியுள்ள கூற்றுக்கள் இன்னும் இலங்கை முஸ்லிம்களது விசேடமாக முஸ்லிம் அரசியல் தலைமைகளது சிந்தனையைத் தூண்டாதிருப்பது வேடிக்கையா? வங்குரோத்தா?? மானம் கெட்ட சமூகமா??? என்று முடிவெடுக்க முடியாதுள்ளது.

இது ஒரு பைத்தியக்காரன் கூற்றல்ல. துறவரம் பூண்டவனும் இதைத்தான் சொல்கிறான். காட்டில் வாழும் உலகப் பற்றில்லாத பழைமை வாதியும் அதைத்தான் கூறுகிறார்கள் என்றால் இது திட்டமிட்ட ஒரு செயற்பாட்டின் வெளிப்பாடே.

காட்டில் மறைந்து வாழும் வேடுவத் தலைவனும் எமக்கு புத்தி சொல்லுமளவிற்கு நாம் வாய்மூடி இருப்பது எந்தளவு பொருந்தும் என்பது வாசகர்கள் முடிவு செய்ய வேண்டும். வேடுவ சமூகத்தின் தலைவன் ஊருகே வன்னியலத்தோவின் சுற்றின் படி பங்கரகம்மனையில் ஒ ருபுள்ளி இருப்பதால் மஹியங்கனையில் தேவையில்லை என்பது. மஹியங்கனையில் இருந்து சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கிலோ மீற்றர் குருக்கு வழியில் பயனம் செய்துதான் பங்கரகம்மனையை அடையமுடியும். பிரதான பாதையைப் பாவித்து சொரபொர வழியாகச் செல்வதானால் பத்திற்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்கள் செல்ல வேண்டும்.

அப்படி என்றால் முழுக்கண்டி நகருக்கும் ஸ்ரீதலதா மாளிகையும், அனுராதபுரத்திற்கு ஸ்ரீமாபோதியும், பொலன்னருவைக்கு ஒரு நுவன்வெளிசாயவும், கொழும்பிற்கு ஒரு களனி ரஜமகா விகாரையும் தென் மாகாணத்திற்கு ஒரு கதிர்காமமும் என்ற அடிப்படையில் ஐம்பது விகாரைகள் வரையில் இருந்தால் போதுமே?

இவை அனைத்திற்கும் பதில் கொடுக்கும் நாள் மிகச் சமீபத்திலுள்ளது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சரியான பதிலை மூன்று மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களும் வழங்கவில்லை என்றால் வேடவன் அல்ல அதை விடவும் ஒரு படி கீழ் இறங்கிய ஒருவனும் முஸ்லிம் சமுகத்திற்கு புத்தி சொல்லவருவான்.

ஒரு நண்பரின் கூற்றை மட்டும் கூறி முடிக்கிறேன். பள்ளியைத் திறக்க வேண்டாம் என்று அங்கு போலீஸ் காவலில் நிற்கவில்லையே. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க பள்ளியைத் திறந்து வழமையான நடவடிக்கையில ஈடடுபட்டால் என்ன? என்பதே? அவர் கேள்வி. 

ஓட்டப் போட்டியில் ஓடித் தோற்பது வேறு. ஓடாமலே ஒதுங்கி நிற்பது வேறு. இரண்டிலும் இறுதி முடிவு ஒன்றாக இருப்பினும் ஓடித் தோற்பதே மேல்.

எந்தவித சட்ட அந்தஸ்தும், ஒழுங்கு விதிகளும் இல்லாத முறையில் எவனோ ஒருவன் தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பாவித்து அதட்டிய அதட்டலுக்கு ஒரு சமூகம் மௌனிக்க வேண்டுமா? வாசகர்களே முடிவு செய்யுங்கள்...!

முந்திய செய்தி

http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_288.html

11 comments:

  1. Atuthan Sari Naam Ean Kaval Turai Sollamal Oru Purampkokein Kathai keatu Palliya Mutanum

    ReplyDelete
  2. he ius veryyyyyyyyyyyyyyyyyyyyyyyy good gentle man words thanking you iwill froud of you i will salute you

    ReplyDelete
  3. It's better to run. Win or not that's from Allah. Silent is not the solution for all.

    ReplyDelete
  4. வேடனுக்கு ஒரு கார் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அந்தக்கார்தான் வேடனைப்பேச வைத்தது. இந்த கேடுகெட்ட அரசாங்கம் பிச்சை கொடுக்காமல் யாரைத்தான் விட்டு வைத்துள்ளது.

    நாளடைவில் பிச்சக்காரனும், பைதியக்காரனும் முஸ்லிம்களுக்கு புத்திமதி சொல்லவருவதை நாம் எதிர்பார்க்கலாம்.

    முஸ்லிம்களுக்கு எதிராக எதைவேண்டும்மானாலும் இந்தக்களுசறைகள் செய்யத்தயார் ......

    ReplyDelete
  5. Please stop voting to MR & regime in the all elections going forward.

    ReplyDelete
  6. இன்னும் நடக்க என்ன பாக்கி?ஹலாலுக்கு ஆப்பு வைத்த போது , கொம்பனித்தெருவில் காலா காலமாக வாழ்ந்து வந்தவர்களை வெளியேற்றிய போது ,பன்றி உருவத்தில் அல்லாஹ் பெயர் எழுதி எரித்தபோது ,மாதம் ஒரு பள்ளிவாசல் என்று அடிக்கப் படும்போது,மேடைகளிலும் மீடியாக்களிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலமாக தூற்றிய போது எப்படி இருந்தோமோ அப்படியே தான் இருக்க போறோம்!

    பெரு நகரங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துகள் காதும் காதும் வைத்தது போல சூறையாடப்படுவது செய்திகளில் வருவதில்லை! ஆளும் அரச குடும்பத்திற்கு தேவையான பில்லியன்கள் பெறுமதிவாய்ந்த முஸ்லிம்களின் சொத்துகள் மிரட்டி சொச்சங்களுக்கு வாங்கப்படுகிறது சமீபத்திய இரை கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டல்.

    இதுபோல ஊருக்கு ஊர் நடக்கிறது திரை மறைவில் மியன்மார் நிலைதான் நடக்கிறது.இந்த நிலை தொடர்ந்தால் நாளை லோக்கல் அரசியல்வாதி கூட எமது நடுவீட்டில் உட்கார்ந்து கொண்டு உரிமை கொண்டாடுவான். நலிந்து போன எங்களை பார்த்து வேடன் மட்டுமல்ல சாஸ்திரம் சொல்லி திரியும் நாடோடிகள் கூட ஆதிக்கம் செலுத்துவார்கள்.

    யாரிடம் சென்று முறையிட? உலமா சபை? சோரம்போன அரசியல்வாதிகள்.....

    ஆனால் எமது பிரச்சினையே வேறு நோம்பு தொறக்க சமூசாவா ரோல்ஸ்சா? இறைச்சி கஞ்சியா இனிப்பு கஞ்சியா.

    பாவம் எமது அடுத்த தலைமுறை!

    ReplyDelete
  7. வேடன் என்ன... அங்கொடையிலுள்ள பைத்தியக்காரர்கள் சங்கத் தலைவனின் அறிக்கையும் இனி இப்படித்தான் வரும்.

    எமது "அடுப்புக்கல்" அமைச்சர்களுக்கு இதுவெல்லாம் இப்போது ஒரு பிரச்சினையே அல்ல.

    எப்படி எந்தச் சுத்துமாத்து அறிககையை விட்டு அரசாங்கத்துடன் இணைந்து கேட்பதற்கான நியாயங்களை எடுத்து வாக்காளர்களிடம் அவிழ்த்து விடலாம் என்பதே அவர்களுக்குள்ள ஒரே சிந்தனையாகும்.

    எனக்குக் கிடைத்த தகவலின் படி மு.கா. அதியுயர்பீடம் நேற்றிரவு இறுதி முடிவு எடுத்ததன் பின் இன்னொரு முஸ்லிம் அமைச்சருக்கு படுக்கை முள்ளாகக் குத்துகிறதாம்.

    "மு.கா. கும்பல் கூடி என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள். ? எங்கள் அமைச்சர் நினத்த மாதிரித்தான் எல்லாம் நடக்கும்" என்ற தெம்பிலிருந்த சிலரும் மு.கா. வின் முடிவால் ஆடிப் போயுள்ளனராம்.

    இப்படி நமது அரசியல் தலைமைகளெல்லாம் இன்னமும் அரசாங்கத்தின் வேட்பாளர் பட்டியலில் பிச்சை கேட்டு தமது அமைச்சுக்களை உறுதிப்படுத்திக் கொள்ளவே இராப்பகலாகச் சிந்தித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது, வேடர் தலைவர் சொல்வதெல்லாம் எங்கே விளங்கப்போகிறது...?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  8. bro.hafis
    ungal aathangam purihirathu. thalaimaihal entha ponthil eththanai udumbu irukkum ena kanakku paarkum kurawarhalin alavukku ponapin veduwar advice pannaththaan seiwar.
    neengal thudikkum inneraththil namathu URIMAIK KAAWALARHALL therthal koottal kaliththal KANAKKU paarpathil BUSY. innum THUROHI THIYAHI pattam koduththu mudintha paadillai.
    mhiyanganai mattumalla innum konjam udayattum appothuthaan awarhalukku THERTHALUKKU UTHAVUM

    ReplyDelete
  9. முழு முஸ்லிம் உம்மத்தும் முழு உடல் போன்று செயல்பட வேண்டிய தருணம் அவர்கள் பயப்படுகிறார்களா ? அல்லது நாம் பயப்படுகிரோமா ?

    ReplyDelete
  10. ellaathukkum uyirppayam entruthaan sollawendum

    ReplyDelete
  11. No need to put all the masjids in trouble because of one musjid. Be patient, Insha Allah, it can lead to success. R. Premadaasa was planning to live 1000 years but 20 years before he died. All these issues until this Mahnida in power that can be ended up even tomorrow. If any one start violence, it can be long lasting problem for all the Muslims. Any one has given Dawah to those "Hurala" (wanniyalaththo)to make them Muslim? that is where we have to think

    ReplyDelete

Powered by Blogger.