Header Ads



நீர்கொழும்பு பிரதிமேயர் சகாவுல்லாவின் கவனத்திற்கு..!

(சுஜாயில் முனீர்)

நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலை அடுத்துள்ள சோனகத் தெருவில் 159 ஆவது கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வந்த ஆயூர்வேத சிகிச்சை நிலையம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது.

இங்கு இலவச ஆயூர்வேத சிகிச்சை பெற்றுவந்த வரிய மக்கள் இதனால் முக்கியமாக வயோதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் உள்ள ஆயூர்வேத வைத்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற்று பாடசாலைகளுடன் தொடர்பு படுத்தி இந்த சிகிச்சை நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்ய முடியும்.

நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் இது விடயத்தில் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு அந்த இலவச வைத்திய சேவையை மீண்டும் வழங்க ஆவண செய்யவேண்டும். 


No comments

Powered by Blogger.