Header Ads



நிகாப் + புர்கா ஆடைகளை தடை செய்க - பொதுபல சேனா கோரிக்கை

முஸ்லிம் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடைகள் அணிவதை உடனடியாக தடை செய்யவேண்டும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.  சட்டம் ஒன்றினை கொண்டுவந்து  முகம்  மூடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிடில் தொடர்ச்சியாக பொது பல சேனா எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டி வரும் எனவும் அந்த அமைப்பின் செயலாளர் கலகொட  அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வளர்ச்சியடைந்த ஐரோப்பாவின் பல நாடுகள் இன்று பொது இடங்களில் முகம் மூடுவதை தடை செய்துள்ளன. முகம் மூடுவதை தடை செய்வது அடிப்படை உரிமை மீறல் ஆகாது. பெல்ஜிய நீதிமன்றம் ஒன்று முகம் மூடுவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 தேசிய பாதுகாப்புக்கு குறித்த உடை அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் மாமா அஸ்மி என்ற பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த குற்றவாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் நீண்ட நாட்களாக பிடிபடாமல் இருந்தமைக்கு முகத்தை மூடி அணியும் முஸ்லிம் பெண்களின் உடையே காரணம். அதனுள்ளேயே அவர் பதுங்கியிருந்தார். இது போல எத்தனை பேர் பதுங்கியுள்ளார்கள். பொது இடங்களில் முகத்தினை மூடிக்கொண்டு செல்வதால் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

குர்ஆனில் எங்கும் பெண்களை முகம் மூடுமாறு பணிக்கப்படவில்லை. முகம் மூடுவது தொடர்பாக ஜம்இய்யதுல் உலமாவுக்குள்ளேயே இரு நிலைப்பாடுகள் உள்ளன. அவர்களில் சிலர் முகம் மூட வேண்டியதில்லை என கூறுகின்றனர். என்றார். vi


5 comments:

  1. ஹலால் போன்ற விடயமல்ல இது முஸ்லிம்பெண்களின் மானப்பிரச்சனை..... ஜமியதுல் உலமாவே அவதானமாக கையாளவும்... எப்பிடியும் அவனுகல்தான் ஜெயிக்க போறானுகள். இதுக்கு நீங்களே முன்னாடி முஸ்லிம்பெண்களை முகத்தை மூட வேண்டாம் என்று சொல்வது சாலச்சிறந்து..... எப்படியும் நீங்கதான் விட்டுக்கொடுக்கப்போறீங்க... ஏதோ பார்த்து செய்ங்க..... இந்த விசயத்துல குரானை நாடுவது மிகவும் நல்லது....." பெண்களுக்குரிய அவ்றத் முகமும் இரு மணிக்கட்டு கைகளையும் தவிர மற்ற பாகங்களை அவர்கள் மூட வேண்டும்"

    ReplyDelete
  2. Ngnasara wiil be converted to holy religeon of islam.Alhamdulillah however he started to issue fatwa also.

    ReplyDelete
  3. First of all our idiots should unite and come to a decision. But we don't have that courage.
    Feel Sad..

    ReplyDelete
  4. உங்களிண்ட மஞ்சள் பிடவயையும் கலட்ட வேண்டுமாக்கும் என்ன.அதுக்குள்ளை அமதிபிடிதுகெண்டு ,கோவிலுக்கு வருகிர சின்ன பெடிகளையும், பெட்டைகளையும் சாமி காட்டுறேன் எண்டு செல்லி , அவியலாக்கு சாம்பல் வாழபழத்தை காட்டி பிடிபட்ட சரிதை எல்லாம் ஞாபகம் இல்லையோ .

    ReplyDelete
  5. பொதுபலசேனவின் நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கின்றது. யாரும் கவனிக்கவும் இல்லை comments பண்ணவுமில்லை இப்படியே ஓடிக்கிட்டிருந்தா பொதுபலசேன என்றொரு குழு இருக்கிறதாவே யாரும் மதிக்கவே இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.