வடமாகாண தேர்தல் - ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்வு
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் விதம் குறித்து ஆராய்வதற்கான முக்கியமான கலந்துரையாடலொன்று திங்கள் கிழமை (08) கொழும்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடந்துள்ள இச் சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாரூக் உட்பட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர்பீட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், ஏனைய முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்.
இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படுமென கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளையில் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் இன்று மாலை 4 மணிக்கு குருநாகல், நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள ப்ளு ஸ்கை (Blue Sky) ) வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபை தேர்தல் சம்பந்தமான கூட்டமொன்றில் உரையாற்றவுள்ளார். அத்துடன் பொல்காவலையில் இன்று இரவு நடைபெறவுள்ள ஒன்றுகூடல் ஒன்றிலும் இதே விடயம் தொடர்பில் அவர் கலந்துரையாடல் பங்குபற்றுவார்.
Post a Comment