ஜப்னா முஸ்லிம் இணையச் செய்திக்கு பலன் கிட்டியது
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
நாவிதன்வெளி பிரதேசசெயலக பிரிவிலுள்ள சாளம்பக்கேணி 5ஆம் பிரிவிலுள்ள வீடமைப்புத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஜப்னா முஸ்லிம் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது வீடுகளை இழந்த மக்களுக்காக இங்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.இருப்பினும் இங்கு வீடுகளுக்கு மின் சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை.அத்துடன் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிணற்றைச்சுற்றி மதில் அமைக்கப்படவில்லை இதனால் இங்குள்ள பெண்கள் இங்கு வந்து குளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர் இக்குறைபாடுகள் தொடர்பாக அண்மையில் ஜப்னா முஸ்லிம் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
இச்செய்தியைப்பார்வையிட்ட கல்முனை நிதாஉல்பிர் அமைப்பு இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளது.இக்குறைபாட்டை நேரில் கண்டறிய நிதாஉல்பிர் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் இஸட்.எம்.அமீன் தலைமையிலான குழு நேற்று2013.07.24 விஜயம் செய்து மின்சார இணைப்பில்லாதவர்களுக்கான இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியை வழங்கியது.அத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிணற்றைச்சுற்றி மதில் அமைக்கப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.இக்குறைபாடுகளை வெளிக்காட்டிய ஜப்னா முஸ்லிமுக்கு அங்குள்ள மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
Post a Comment