வடமாகாண சபையில் தனித்தே போட்டி - உயர்பீடக் கூட்டத்தில் மு.கா. திட்டவட்டம்
வடமாகாண சபையில் மஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுமென்ற தீர்மானம் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் சந்தித்துக் கொணடதையடுத்து வடமகாண சபையில் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமென தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருந்தபோதும் வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கூடிய முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனியே போட்டியிடுமென முன்னயை உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த அடிப்படையில் வடமகாண சபையில் அரசாங்கத்துடன இணைந்து கேட்க எத்தகைய வாய்ப்புகளும் இல்லையெனவும் ஹசன் அலி திட்டவட்டமாக கூறினார்.
அத்துடன் வடமாகாண சபை தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட தாம் இன்னும் தயாராகவிருப்பதாகவும், அதற்காக அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட தயாரில்லையெனவும் ஹசன் அலி மேலும் கூறினார்.
அதேவேளை 3 மாகாண சபைகளிலும் தம்முடன் இணைந்து போட்டியிட வருமாறு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்துக் கொண்டிருப்பதாகவும் எனினும் தனியாக போட்டியிடுவது என்ற முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லையெனவும் ஹசன் அலி உறுதிபடத் தெரிவித்தார்.
Where's that Hon.Athaulla's National Party?
ReplyDeleteNot suitable for those Provincials?
Why can't they help to Muslim Congress? If can't sleep well.
Whatever you do that for own benefits of some bunch of people who took this part for their own acord who care what you do???
ReplyDeleteWhatever you do that for own benefits of some bunch of people who took this part for their own benefits who care what you do???
ReplyDeleteதனித்து போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடியுங்கள்....விகிதாரசார முறையில் எஞ்சும் வாக்குகளுக்கு உறுப்புரிமை கிடைத்தால் அதை பண பேரம்பேசலை முன் வைத்து அரசுக்கு ஆதரவளித்து விற்று விடுங்கள் ...ஆனால் இம்முறை உங்கள் ஜம்பம் வடமாகாண தேர்தலை பொறுத்தவரையில் பலிக்காது...கூட்டணிக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்தாலும் நீங்கள் மானம் இழந்து ஒட்டியிருக்கும் அரசு என்ன சுற்று மாற்றுகளை செய்வார்களோ தெரியாது....அப்படி நடப்பது உங்களுக்கு கொண்டாட்டம் ஆனால் முஸ்லிம் சமூகத்திக்கு கிடைப்பது ....???? அச்சுறுத்தலும் அடிமை வாழ்வும் தான்.
ReplyDeleteநீங்களுவூல் சாரி உடுங்கட ஒங்கட போம்புலயோளுக்கு கல்சன் உட்படுன்கடா
ReplyDeleteநம்ப முடியாமலிருந்தது. இரண்டாவது தடவையாகவும் இந்தச் செய்தியை வாசித்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இக்கருத்தைப் பதிவு செய்கின்றேன்.
ReplyDeleteஸ்ரீ.ல.மு.கா. தனித்துப் போட்டியிடுவதென்ற முன்னைய முடிவை உறுதிப்படுத்தியிருப்பது அக்கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் முடிவேயன்றி அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு பெரியளவில் நன்மையொன்றும் ஏற்பட்டு விடாது.
காரணம் இது ஏற்கனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெளியிடப்பட்டு சக்கை போடு போட்டு வெற்றிகரமாக ஓடிய அதே 'றீல்' தான்.
தேர்தல் முடிந்த கையோடு தப்பித்தவறி மாகாண அரசாங்கத்தை அமைக்க அரசுக்கு இக்கட்சியில் தெரிவாகும் உறுப்பினர் தேவைப்பட்டால் மிக நல்ல விலைக்கு அவரைச் சந்தைப்படுத்தலாம்.
மு.கா. தனித்துக் கேட்பதென்ற முடிவு அமைச்சர் றிஸாட்டுக்கு வயிற்றைக் கலக்கினாலும், அரசாங்கத்திற்கு எந்தவொரு கலக்கத்தையும் கொடுக்காது.
எப்படியும் மு.கா. தன்னுடைய அடுப்பங்கரையச் சுற்றும் பூனையாகவே தொடர்ந்தும் இருக்கும் என்பது மஹிந்த சிந்தனையிலுள்ள ஒரு நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கைக்கு குண்டு போடுவதாயின் "அரசாங்கத்திலிருந்தும் வெளியேறுகிறோம்.. அமைச்சர் பதவிகளையும் தூக்கி எறிகிறோம்.." என்று இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பேரால் சுயமரியாதைப் பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டும். அப்படியெதுவும் நடக்கவே நடக்காது.
இப்போது நம்மத்தியில் மற்றொரு கேள்வியும் எழுகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், அரசாங்கத்தின் வளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அரசுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என தனது பிரதியமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்து முஸ்லிம் சமூகத்தையும், கட்சித் தலைமையையும் பிரமிக்கச் செய்திருந்தார்.
இப்போது வடக்குத் தேர்தலுட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் மு.கா. தனித்தே போட்டியிடுவதாகத் தீர்மானித்திருப்பதால் யார் அமைச்சர் பதவிகளைத் தூக்கி வீசாவிட்டாலும், மானமும், ரோஷமும், தன்னம்பிக்கையும் உள்ள அமைச்சர் பஷீர் தனது உற்பத்தித் திறன், திறன் அபிவிருத்தி அமைச்சைத் துறந்து விட்டேதான் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குவார் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் கௌரவப் பிரச்சினையும், எதிர்பார்ப்புமாகும்.
எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
மாஷாஅல்லாஹ் நல்ல முடிவு ஜஸாகல்லாஹு ஹய்றா
ReplyDeletearikkayaal oru maalihai amaiththu
ReplyDeletesawaalhalaal mediyittu
engal mariyaathayai maanaththai vilai koori vitru
amaichu waangi PADUTHTHU THIRIYUNGALL.