Header Ads



ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்தும் முஸாபகது ரமழான் போட்டி நிகழ்ச்சி

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்தும் முஸாபகது ரமழான் போட்டி நிகழ்ச்சி ஜப்னா முஸ்லிம் இணையமூடாக நடைபெறவுள்ளது. இணையத்தின் மேல்பகுதியில் இதனுடன் தொடர்புடைய பூரண விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் தொடராக கேள்விகளும் பதிவேற்றம் செய்யப்படும்

கொழும்பிலுள்ள World Cultural Center for Development and Training நிலையத்தின் அணுசரனையுடன் ரியாதிலுள்ள தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்தும் முஸாபகது ரமழான் 1434 போட்டி

நிபந்தனைகள்:

1. ஆண்கள், பெண்கள் யாவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரமே பங்குபற்றலாம்.
2. பகுதி 01 க்கு فمن أظلم எனும் 24 ஆவது ஜுஸ்உலிருந்தும், பகுதி 02 க்கு ஸஹீஹுல் புகாரியின் 01 முதல் 300 வரையிலான ஹதீஸ்களிலிருந்தும், பகுதி 03 க்கு 'அர்ரஹீகுல் மக்தூம்' எனும் நபி (ஸல்) அவர்களின் சரித்திர நூலின் ஆரம்பம் முதல் (பக் 60) நபித்துவம் வரையிலான பகுதியிலிருந்தும், பகுதி 04 க்கு பொதுவாகவும் விடையளிக்க வேண்டும்.
3. விடைகள் யாவும் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட வேண்டும்.
4. மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஆகவே, பொது மக்களின் நலன் கருதி மௌலவிமார்கள், மௌலவியாக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
5. வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.
6. மற்றவர் எழுதியதைப் பிரதிபன்னல், ஒருவர் பல பெயர்களில், பல விலாசங்களில் எழுதுதல் போன்றவை துரோகமும், மோசடியுமாகும். மோசடி இஸ்லாத்தில் ஹராமாகும். அதனை முற்றாகத் தவிர்க்கவும். 
7. ஒவ்வொரு பகுதிக்குமுரிய விடைகள் தனித்தனி தாள்களில் எழுதப்பட வேண்டும்.
8. விடைகளை 24 ஷவ்வால் 1434 (31.08.2013) ஆம் திகதிக்கு முன்பு பின்வரும் விலாசங்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

“Musabakathu Ramalan 1434” World Cultural Center for Development and Training, No:18, Siri Darmarama Road, Colombo - 09
"MUSABAKATHU RAMALAN 1434" Old Sinaiyyah Islamic Center, P.O.Box: 255018, Riyadh: 11353, KSA.

9. பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் ஏற்கப்படமாட்டாது. 
10. மேலதிக விபரங்களுக்கு: 011 267 11 87, 0777 367 518, +966 55  327  80  85, +966  567  148  958
11. வினாக்களை World Cultural Center for Development and Training நிலையத்தின் மூலமோ, tamildawaonriyam@gmail.com என்ற E-Mail முலமோ பெற்றுக்கொள்ளலாம்.
12. போட்டியாளர் விடைகளுடன் பின்வரும் விபரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
    
பெயர்:  
விலாசம்: 
அடையாள அட்டை இல.:  
கைப்பேசி, தொலைபேசி இல.: 
மின்னஞ்சல் முகவரி:    
இப்போட்டி பற்றிய கருத்து:

சத்திய இஸ்லாத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தூய வடிவில் கற்று, உண்மை முஸ்லிமாக வாழ்ந்து, ஈமானோடு மரணித்து, உயர்ந்த சுவனத்தை அடைய நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

Tamil Dauwa Association - Riyadh
tamildawaonriyam@gmail.com
01.09.1434

1 comment:

Powered by Blogger.