Header Ads



பிரதியமைச்சர் அப்துல் காதரின் நீதிமன்ற முறைப்பாடு - ஐ.தே.க. செயற்குழுவிற்கு தடையுத்தரவு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் அந்த கட்சியின் செயற்குழுவிற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதருக்கு எதிராக இன்றைய தினம் ஒழுக்காற்று விசாரணைகள் இடம் பெறவிருந்தன.

இன்றைய தினம் ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், நாடாளுமன்ற நாட்களில் அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது ஏற்புடையதல்லவென முறைப்பாட்டு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே, இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள வழக்குப் போடும் உலப்பணை காதர் தனது சமூகத்தை காப்பாற்ற ஒரு வழக்குப் போட மாட்டாரா .

    ReplyDelete
  2. அப்பா காதர் ...... உமக்கென்ன பிரச்சினை ?
    முஸ்லிம்களாகிய எமக்குத்துத்தானே பிரச்சினை ...

    இலங்கையில் முஸ்லீம்கள் வால்கிறாங்க என்ற எண்ணமாவது இருக்கா உங்களுக்கு ?

    ReplyDelete
  3. You totally selfish, you want to continue your MP to fullfil your own benifits, So you don't have any manners to talk or think on your community, Ask isthihfaaf first to enter Jannah, without asking MPs from Kuffar.

    ReplyDelete
  4. இதே கையோட போயி மஹியங்கனை பள்ளிவாசலைத் திறக்குறதுக்கு ஒரு வழக்குப் போடுங்க சேர்.
    - சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம் -

    ReplyDelete

Powered by Blogger.