Header Ads



மொரோக்கோவில் இஸ்லாமிய கட்சிக்கு சவால்..!

மொரோக்கோவில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஜஸ்டிஸ் & டெவலப்மெண்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இது ஒரு இஸ்லாமியவாத கட்சியாகும். இதனை அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது இஸ்டிக்லால் என்ற மத சார்பற்ற இடதுசாரிக் கட்சியாகும். இதில் ஆறு உறுப்பினர்கள் மந்திரி பதவி வகித்து வந்தனர்.  

பொருளாதாரக் கொள்கை மற்றும் மானியங்கள் வெட்டு போன்ற பிரச்சினைகளில் அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், ஆட்சியிலிருந்து விலகுவதாக இஸ்டிக்லால் கட்சியின் செய்தியாளர் அடில் பென்ஹம்சா இன்று தெரிவித்தார். பிரதமர் அப்டெலிலா பென்கிரானே மக்களின் பிரதிநிதித்துவமான அரசின் தலைவர் போல் இல்லாமல், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் போன்ற நோக்கத்துடன் செயல்படுகின்றார் என்று அவர் குறை கூறியுள்ளார்.

ஆளும்கட்சியோ, இஸ்டிக்லால் கட்சி அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தங்களில் நாசவேலை செய்ய நினைக்கின்றது என்று தெரிவித்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்டிக்லால் கட்சியின் ஆறு மந்திரிகளில் ஐந்து பேர் ராஜினாமா செய்துள்ளனர். கல்வி அமைச்சரான முகமது இல் குவாபாவின் ராஜினாமா குறித்து விபரம் தெரியவில்லை. ஆட்சியில் தொடர வேண்டுமானால், ஆளும்கட்சி அடுத்த கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்தலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதில், முதல் தேர்வே நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  

எகிப்தின் இஸ்லாமிய அதிபர் முகமது மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட ஒரு வாரத்தில் மொரோக்கோவின் பிரச்சினை வெளிவந்துள்ளது. அவரது சகோதரர் மோர்சி போல் பென்கிரேனும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று இஸ்டிக்லால் கட்சியின் தலைவர் ஹமித் சபைத் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

No comments

Powered by Blogger.