'அரசியல்வாதிகளாகிய நாம் மெளனிகளாக இருப்பது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம்'
(ஏ.எல்.ஜுனைதீன்)
ஊடகமயப்படுத்தலில் மக்கள் இன்று வேகமாக முன்னேறி வருகின்றனர் இணையத்தளங்களும் அச்சக ஊடகமான செய்திப் பத்திரிகைகளும் உடனுக்குடன் செய்திகளைத் தருவதுடன் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எத்தனங்களையும் பரிமாறி வருகின்றன. இவ்வாறான வேகமான செயல்பாட்டின் தாக்கத்தில் அரசியல்வாதிகளான நாம் வேகம் குறைந்து செயல்படுவது ஆரோக்கியமற்ற ஒன்றாகும் என திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தேர்தல் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அண்மையில் மருதமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ் இங்கு தொடரந்தும் பேசுகையில் மேலும் குறிப்பிட்டதாவது,
இன்று முஸ்லிம்கள் பேரினவாத தரப்புக்களால் பல்வேறு அநீதிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலை நாளுக்கு நாள் குறைவின்றி அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.இப்படியான சூழ் நிலையில் அரசியல்வாதிகளாகிய நாம் மெளனிகளாக இருப்பது முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் துரோகமும் அநியாயமுமாகும். இதனை எம்மைப் படைத்த இறைவனும் அங்கீகரிக்கமாட்டான்.
முஸ்லிம் சமூகம் பாதிப்புக்குள்ளாகும்போது எமது உணர்ச்சிகள் உறங்கி விடுவதில் எதுவித அர்த்தமும் கிடையாது. அபிவிருத்தி என்ற மாயையால் உரிமை என்ற விடயத்திற்கு அபிவிருத்தி என்னும் முடிச்சுப் போட்டு விட யாரையும் நாம் அனுமதிக்க முடியாது. எமது உரிமைகள் விடயத்தில் எமக்குள்ள வேறுபாடுகளைக் கலைந்து சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. அபிவிருத்தி என்பது மக்களின் தேவையாக இருந்த போதிலும் அந்த அபிவிருத்திக்காக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம்களின் உரிமை மீறல்களைப் பகிரங்கமாகக் கண்டித்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரதேச சபை அங்கத்தவராவது தனது பதவியைத் தூக்கியெறிந்து முன்மாதிரியாகச் செயற்பட்டால் அது எமது சமூகத்திற்கு எவ்வளேவோ ஆறுதலாக இருக்கும்.
ReplyDeleteஅதைவிடுத்து இவ்வாறான வெறும் 'வாய்ப்பந்தல்' அறிக்கைகளால் எவ்விதப் பயனும் இல்லை.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
enna next election varavum vaai thirekkayala?
ReplyDeleteinthe muslim peyar vaiththa arasiyal+vaathikal nalla nadikarkal.
சென்ற தேர்தலில் நீங்களும் உங்கள் தலைவரும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக வாய் கிழிய மேடை போட்டு பேசினிங்க அனால் இப்போது வாய் மூடி மௌனியாய் இருக்கிங்க??? இலங்கையில் அதிகமான முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் ஆல் இது வரை என்ன செய்ய முடிந்தது. வேதனை இன்னும் மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. நமது சமுகத்துக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யும் சேவை இதுதானா. நீங்கள் சிறந்த ஒருவர் எனவே உங்கள் உயர் பீட கூட்டதில் இதைபற்றி பேசுங்கள்.
ReplyDeleteஅறிக்கை விடுவதற்கு முன் எம்சி முடிவுக் கணக்கு செய்தவர்கின் காசைக் கொடுத்து அவர்களது கடனை முடியுங்கள்.
ReplyDeleteதம்பி ஹரிஸ் மருதமுனை ஆக்ரோசம் பயன் தராது பாராளுமன்றில் பேசினால் ஹன்சாடில் ஏனும் பதிவாகும்...படலையடியின் கூச்சல் கிணற்றுள் இருந்து போடும் சத்தமேயன்றி வேறில்லை ..நீங்கள் இப்போது எதனை தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் ...பாராளுமன்ற கதிரையை சூடாக்கி வருகிறீர்கள்..மர்ஹூம் தலைவரின் பின்னர் நீங்களும் உங்கள் கட்சியும் துரோகம் தானே சமூகத்துக்கு செய்து கொண்டிருக்கிறது அதில் என்ன ஐயம்.
ReplyDeleteIthai Ninga yaarta solrinka? Arasiyal wathikal naankalalla . Ningaley...!
ReplyDeleteIf you resign we welcome you otherwise you are talking for summa.
ReplyDeleteCan you resign your MP, and you should talk at Parliament like Hunais Farook from Vanni. You can't do it. so, no back born to you.
ஹரீஷ் ஐயா ...சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
ReplyDeleteஅல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
துன்யாவில் உங்களுக்கு நாங்கள் வாக்களித்தம்! மஹ்ஷர்ரில் நீங்கள் அல்லாஹ்வுக்கு கணக்குகாட்ட வேண்டும்.
அல்லாஹ்வை பயந்து முஸ்லிம்களாக பாராளுமன்றில் குரல் கொடுங்கள்..மருதமுனையில் வேண்டாம்!
Muslim Samukathien Amanietham Ennachi.............?
ReplyDeleteMuslim Samukathien Sapakdu Unkallai Suma Viedathu
Unkal Paramparai Alithuviedum.
Mahintha Raja Vukku Payama.......or...........Allah vukkum Payam
ACJU/Kalmunai Ulamahkalai ..........Mahintha Raja Vukku Payama.......or...........Allah vukkum Payama 17 Masjith Thakkapaddullathu...Unkal Nilaippaduthan Enna.......?
Unkal Pinnal Nientru Tholalama ...........?