இந்தியாவுக்கு பொதுபல சேனா எச்சரிக்கை, தூதரகம் முன் சிங்கள ராவய ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கு, சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு வந்துள்ள சிவ்சங்கர் மேனன் உடனடியாக புதுடெல்லிக்குத் திரும்பிச் சென்று விட வேண்டும் என்று, பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடதத்த ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இந்தியாவில் உள்ள பௌத்த பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், இன்னமும் கூட புத்தகயவை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிவ்சங்கர் மேனன், புதுடெல்லிக்குத் திரும்பிச் சென்று விட வேண்டும், எமது பாதுகாப்பை சிறிலங்காவே பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மற்றொரு சிங்களத் தேசியவாத அமைப்பான, சிங்கள ராவய, புத்தகயவின் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
Post a Comment