கப்பல்கள் மோதல் - அரபு இராச்சிய கடலில் இலங்கை கப்பல் மூழ்கியது
இலங்கையின் கொடியை தாங்கிய கப்பல் ஒன்று மற்றும் ஒரு கப்பலுடன் மோதியதை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் உம் அல் குவேவென் துறைமுகப்பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது.
எனினும் விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களிலும் இருந்த 30 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஈhhனில் இருந்து டுபாய்க்கு சென்ற இலங்கை கொடியை தாங்கிய கப்பலும் டுபாயில் இருந்து சோமாலியாவுக்கு புறப்பட்ட கொமரோஸ் தீவுகளின் கப்பல் ஒன்றுமே கடந்த வெள்ளிக்கிழமையன்று மோதிக்கொண்டன என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது இலங்கைக்கொடியை தாங்கிய கப்பல் மூழ்கிய அதேநேரம் கொமரொஸ் தீவுகளின் கப்பல் பழுதடைந்தது. இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. sfm
Post a Comment