Header Ads



சொரணையே இல்லாத சோனகனை சந்திப்போம்.. வாருங்கள்...!!


(ரவுப் ஹஸீர்)

தம்புள்ளை தொட்டு
மஹியங்கனை வரை
எவ்வளோவோ நடந்து விட்டது .
அரசியல் தலைவர்களையும் ,
ஜெம்மியதுல் உலமாவையும்
நாம் நிறையவே
திட்டித் தீர்த்தாகி விட்டது .

இவர்களை எல்லாம் இனி
நம்பிப் பயனில்லை .......
என்று சலித்து .....
நாமாகவே ....
என்று வீராப்பு பேசவும்
ஆரம்பித்தாகிவிட்டது .

 போதாக்குறைக்கு -
" வரட்டுமே , வாக்குக் கேட்டு....
படிப்பிக்கிறோம் பாடம் ! "
என்றெல்லாம் சட்டை கைகளையும்
மடிக்க தொடங்கியாகிவிட்டது .

தன்னைத் தவிர மற்ற அனைவருமே
இஸ்லாமியப் பற்றற்றவர்கள் என்று
முத்திரை குத்துகிறவாறு
குற்றம் சாட்டியும் ,
குத்திக்காட்டியும்
முகநூலில் நிறையவே எழுதியுமாகிவிட்டது .

தேர்தலில் நிற்காத அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் ;
அறிக்கை மேல் அறிக்கை எழுதி
பத்திரிகைகள் ,
இணையத்தளங்கள்
எதனையும் விடாது - அவற்றை
மகா ஜனங்களின் பார்வைக்கு
சமர்ப்பித்துமாகிவிட்டது !

புதுக்கட்சிக் காரர்கள் ,
கிடைக்கிற மேடைகளில் எல்லாம்
ஏறி ஏறி ,
ஒலி வாங்கி   ,
விழி பிதுங்க -
பார்வையாளர்களின் காதுச் சவ்வை
கிழி கிழியென
கிழித்துமாகிவிட்டது !

எதுவுமே இன்னும்
முடிவுக்கு வரவில்லை .
எல்லாம் அதைப் போலவே ,
அல்லது அதனை விடவும்
அதிகமாகவே
நடந்து கொண்டிருக்கிறது .

போதாக்குறைக்கு
" தொப்பிபோட்ட குப்பியொன்று
துளிர் விடா வயதுத்
துறவி மீது கொட்டியதால்
காவி உடைமீது
கறை கவிழ்ந்த  
காவியத்தை ,
பெரும்பான்மை தோட்டத்து   
எட்டு முகை அவிழாத
மொட்டொன்றில்
தம்பி(யா)த் தும்பி
தேன் குடித்த
தேள் கதையை ,  
.....................................................................
பென்னாம் பெரீய்ய
பாதாளம் எட்டுகிற
பாதகத்தை  எல்லாம்
கபனிட்டு ,
நிகாப் உடுத்தி ,
ஊத்த நாத்தம்
ஊடகத்திற்கு கசியாமல்
போ(ர்)த்திவைச்சி
காத்தவன் நான் ,
பள்ளி உடைப்பு ,
பள்ளி அடைப்பு
என்கிற
பூச்சிகளையெல்லாம் - ஏன்
பூதமா(க்)க பார்க்குறீங்க ? " - என்று
புத்திமதிப் புத்தகமும்
அச்சாகிவிட்டது .

இப்போது ........
இவை எல்லாம் முடிந்த பிறகு ,
இன்னும் ஒரே ஒரு வேலைதான்
பாக்கி இருக்கிறது ! 

இந்த
திட்டித் தீர்த்தவர்கள் ,
சவால் விட்டவர்கள் ,
சட்டைக் கையை மடித்துக்கொண்டு
சண்டித்தனம் செய்ய தயாராகிறவர்கள் ,
ஒலிபெருக்கி வெடிக்க கத்தியவர்கள் ,
அறிக்கை மேல் அறிக்கை விட்டவர்கள் .......
இன்னும் இன்னும் இத்தியாதி
மேதாவிலாசத்திற்கு உரித்துடையவர்கள்.....
எல்லோருமே ஆவலுடன் ,
அதுவும் பேராவலுடன்
காத்துக்கொண்டிருக்கிறார்கள் ..........

இன்று வரும் ,
நாளை வரும்
என்று ஒவ்வொரு நாளும்
தபால்காரனின் மணியோசைக்காக
ஏங்கித் தவம் கிடக்கிறார்கள் ....

அந்த
அழைப்பிதலுக்காக !
எந்த
அழைப்பிதலுக்காக ?

எதற்கு ... எதற்கு......
வேறு எதற்குமல்ல .....
வரிசையிலே வந்து ,
மாளிகையின் வாசலில்
மணிக்கணக்கில் வெந்து ,
சர்வாங்கம் முழுவதும் 
சல்லடை இடப்பட்டு ,
சட்டை மேலே அதற்கான
முத்திரை ஒட்டப்பட்டு
அதன் பிறகு
சொர்க்கத்திற்குள் போனதுபோல - ஒரு
சுகானுபாவத்துடன் சொக்கி ........
கஞ்சி குடிக்கத்தான் !
எதற்கு......வேறு எதற்கு ?

சொரணை உள்ள
சோனகன் போவானா ?

10 comments:

  1. சொரனையே இல்லாத சோனகர்கள் தானே நம்மத்தியில் அதிகம்.

    அதனால் நிச்சயம் நிறையவே போவான்.

    நாளைய ஊடகங்களில் பெரியவரின் அருகமர்ந்து சிரித்து மகிழ்ந்து கஞ்சிக் கோப்பையுடன் இந்தச் சொரணையற்ற சமூகம் காட்சி தருவதை...

    நீங்களும் நாங்களும் பார்க்கத்தான் போகின்றோம்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. excellent.yaru eluthithirthanil vasiththu manam aarudal adaikithu

    ReplyDelete
  3. நானா போவாரே

    ReplyDelete
  4. Muthalil Unkada Brother Poratha nippandunka , after that u can tolk about others

    ReplyDelete
  5. சொன்னாலும் சொன்னீங்க போங்க.

    ReplyDelete
  6. ஆம்! சொரணையுள்ள சோனகன் போவானா? போக மாட்டான்.
    சொரணையற்ற அரசியல் தலைமைகளை வளர்த்து விட்டிருக்கிறானே இந்தச் சொரணையற்ற சோனகன்.....

    ReplyDelete
  7. போக மாட்டார்..போக மாட்டார்..!

    சமூகத் தாயை
    விற்றுப் பிழைக்கும்
    அந்தச் சதிகாரர் போக மாட்டார்
    இம்முறை...

    ஏனெனில்,
    தேர்தல் வருகிறதல்லவா...!

    பெரிசின் அழைப்பைப் புறக்கணித்த
    பெரும் தியாகிகள் நாம் என
    தேர்தல் மேடைகளில்

    பெரிசாய்ப் பேசிட
    இதையும் பேசுபொருளாக்குவார் ..

    ஆனால்...

    பின்னொரு நாள்
    பின் கதவால் சென்று
    கஞ்சியும் குடிப்பார்...அவரின்
    குஞ்சியும் பிடிப்பார்....!

    காவியுடைப் பயங்கரவாதமென்றும்
    காப்போம் தம்புள்ள பள்ளியை என்றும்
    ஆவேசமாய்ப் பேசிய-அந்த
    அட்டைக் கத்தி மன்னர்கள் எல்லாம்

    இப்போதே தீர்மானித்து விட்டார்கள்-
    இப்தாரைப் புறக்கணித்து
    எம்மை ஏமாற்றலாமென்று!

    'கூட நீ வந்தால்
    சமூகம்
    கொடுக்காது வாக்கெனக்கு; ஆதலால்
    தனித்துப் போய்த்
    தனித்துவத் தந்திரம் பேசி-

    வாக்குகளைக் கவர்ந்து வந்து
    வழங்கிடுவேன் நானுனக்கு;
    அதுவரையில்-
    நானும் நீயும் எதிரிகள் போல்
    நாடகத்தைக் காட்டிடுவோம்!'

    என்கின்ற ஒப்பந்தம்
    எப்போதும் போல்
    இப்போதும்!

    ஆனால்-
    இம்முறை நாடகத்தின்
    முதல் காட்சியாக
    'இப்தார் புறக்கணிப்பு'
    இருக்கப் போகிறது...!

    அதனால்-
    சொரணை இல்லா
    சோனி காங்கிரசார்
    கஞ்சி குடிக்கும் விழாவுக்கு
    இந்தத் தடவை
    கனவிலேனும் போக மாட்டார்!

    ReplyDelete
  8. கடந்த ரமழான் தம்புள்ள தெஹிவல பள்ளி உடைப்புக்கு பின் தான் வந்தது. பெரியவரின் இப்தார் அழைப்பு வந்த போது 2006 முதல் போன நாம் நாம் போகவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் போளீன் போட்டு போனார்கள். சபீக் ரஜாப்தீன் 70 அழைப்பிதழ்களை கொழும்புக்குள் விநியோகித்தார். உலமா கட்சி

    ReplyDelete

Powered by Blogger.