சிறுவர்கள் பட்டாசு கொளுத்தியதால் பள்ளிவாசல் மையவாடியில் தீ
(Vi) காத்தான்குடி ஜாமியுழ்ழபிரீன் பள்ளிவாசல் மையவாடியில் சிறுவர்கள் பட்டாசு கொளுத்தியதால் மையவாடியின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை காத்தான்குடி ஜாமியுழ்ழபிரீன் பள்ளிவாயலுக்குச் சொந்தமான மையவாடியை அண்டிய பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பட்டாசுக் கொளுத்தி மையவாடி பக்கம் வீசியுள்ளனர்.
இதனால் மையவாடியின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தச் சம்பவத்தை கேள்வியுற்ற காத்தான்குடி ஜாமியுழ்ழபிரீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் அங்கு விரைந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இந்த மையவாடியைச் சுற்றி கடைத்தொகுதியும் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment