Header Ads



ஸ்பெயின் ரயில் விபத்து - அதிவேகமாக ஓட்டுகிறேன் பேஸ்புக்கில் எழுதிய டிரைவர் (வீடியோ)


ஸ்பெயினில் 78 பேரை பலி கொண்ட ரயில் விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து பெரோல் நகருக்கு வந்து கொண்டிருந்த ரயில் கடந்த 25ம் தேதி தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் 78 பயணிகள் பலியாகினர். அவர்களில் அர்ஜென்டினா, பிரிட்டன், கொலம்பியா, அமெரிக்கா, பெரு நாடுகளை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 190 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.விபத்துக்குள்ளான ரயிலில் 2 டிரைவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ (52) என்பவர் ரயிலை ஓட்டியபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.

கர்சான் 13 ஆண்டுகளாக ரயில் டிரைவராக இருந்துள்ளார். ஆனாலும், ரயிலை கவனக்குறைவாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் போலீசார் விசாரித்த போது எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.வேகமாக ரயில் ஓட்டுவதில் கர்சான் ஆர்வம் கொண்டவர் என தெரியவந்துள்ளது. ரயில் விபத்துக்கு முன்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், 200 கி.மீ. வேகத்தை காட்டும் ஸ்பீடாமீட்டர் படத்தை வெளியிட்டு, நான் உச்சகட்ட வேகத்தில் இருக்கிறேன், இதை விட வேகமாக போனால் எனக்கு அபராதம் விதிப்பார்கள் என்ற வாசகத்தை எழுதியுள்ளார். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது.





No comments

Powered by Blogger.