தேர்தலில் இணைந்து போட்டியிட அரசு விடுத்த அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் நிராகரிப்பு
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் இணைந்து போட்டியிடுமாறு ஆளுந்தரப்பு விடுத்த அழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக உயர்பீட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்த போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எமக்களிக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் எந்த நம்பிக்கையுடன் அரசுடன் இணைந்து போட்டியிட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது தவிர கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடமேல் மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போது முகாவின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பலவந்தப்படுத்தப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்ட விடயமும் பேசப்பட்டுள்ளது.
ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பல தடவைகள் முஸ்லிம் காங்கிஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு மூன்று மாகாண சபைகளிலும் இணைந்து போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் அதிஉயர் பீடம் கூடி எடுக்கும் முடிவுக்கமையவே தம்மால் செயற்பட முடியுமென உறுதிபடத் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
முகாவின் முடிவால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவைத் தயாரிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மூன்று மாகாணங்களுக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை தேட வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. Tl
மறுபடியுமா..? இன்னும் எத்தனை காலத்திக்கு தான் மக்களை இவ்வாறு ஏமாற்ற போரார்கலோ? மக்களே உஷாரா இருங்கோ!!
ReplyDeleteMuslim Congress is playing a big game here. They know that if they compete in the election with the Government they will get less votes. They want to get majority of votes from Muslims and that's why they are playing a game now. After winning the election, they will again join the Government after getting paid crores / Millions of Rupees. We innocent Muslims will be the victims once again. So, Muslim voters be careful, be careful, be careful. Never vote for Muslim Congress. They are betrayers and as someone mentioned earlier, for Muslims they are Muslim politicians but for the Government these wily Muslim politicians are real businessmen. We have no choice. Either we have to believe in new politicians or cancel our votes at the polling booths so that our votes are protected from illegal votes being casts by impersonation. May Allah save our society!
ReplyDeleteஎங்க சார் முஸ்லிம் வேட்பாளருக்கு நெருக்கடி இருக்கு?
ReplyDeleteஅதான் யாழ்ப்பாணத்தில ஒரு முஸ்லிம் என்னயப் போடு என்டு ஊரக்கூட்டி அமர்க்களம் பண்ணிக்கிட்டிருக்காரே.. அவரத்தூக்கிப் போட வேண்டியதுதானே..!
அப்புறம் அமைச்சர் றிஸாத்தோட தம்பியும் இருக்காராமே..!
அமைச்சர் றிசாத் என்ன அக்கரைப்பற்றிலா அரசியல் செய்கிறார்? மன்னார் அவரது கோட்டையாமே..?! அப்புறம் என்ன மன்னாரிலுமா முஸ்லிம்களுக்குத் தட்டுப்பாடு..? அத்தாங்குல அள்ளுறாப்போல சும்மா அள்ளிப் போட்டு பட்டியல நிரப்பிட வேண்டியதுதானே..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-