இப்தார் யாருக்காக..?
(Dr. N. Ariff)
நான் மார்க்க அறிவில் முதிர்ச்சி பெற்றவனல்ல. எனக்கு கண்முன்னே தெரிகின்ற சில விடயங்களை ஆதங்கத்துடன் கூற முனைகின்றேன். தவறிருந்தால் மன்னித்து விடுங்கள்.
நாங்கள் புனிதமான, மகத்துவமிக்க ரமழானின் பாதியைக் கடந்து இன்னும் எஞ்சிய நாட்களை இன்ஸாஅல்லா கடக்கவிருக்கின்றோம். நாங்கள் செய்கின்ற நல்லமல்கள் இறைவனின் பொருத்தத்தைப் பெறக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமாட்டாது என நம்புகின்றேன்.
இம்முறையும் புனித ரமழான் நோன்பு ஆரம்பித்த நாளில் இருந்து தனிப்பட்ட முறையிலும் பொது நிறுவனங்களாலும் தினமும் இப்தார் நோன்பு திறப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றால் உண்மையில் நாங்கள் இறைவனின் பொருத்தத்தைப் பெறுகின்றோமா? இந்த இப்தார் நிகழ்வுகளில், நோன்பு திறக்க வசதியற்ற எத்தனை ஏழைகள் கலந்துகொள்கிறார்கள்? பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.
இப்தார் நிகழ்வு இன்று ஒரு பெருமைக்குரிய சடங்காக மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. இப்தார் நிகழ்வில் பங்குபற்றுவோரின் நிரலைப்பார்த்தால் அனைவரும் உயர்ந்த பதவி வகிப்பவர்களும், வசதி படைத்த செல்வந்தர்களும் தான் இருப்பார்கள். வசதியற்ற ஏழைகளைக் காணவே முடியாது. ஏட்டிக்குப் போட்டியாக மாறி மாறி தினமும் இப்தார் நடக்கின்றது. உண்மையில் இதில் ஏதும் நன்மை கிடைக்குமா?
பெரும்பாலான இப்தார் நிகழ்வுகள் பொது நிறுவனங்களின் அனுசரணையுடன் நடாத்தப்படுகின்றன. அதாவது பொதுப்பணம் விரயமாக்கப்படுகின்றது. நோன்பு திறக்க வசதியற்ற ஏழைகள் இல்லாத இப்தார் நிகழ்வுக்கு செலவாகும் பணத்தை மொத்தமாக ஒரு ஏழைக்குடும்பத்துக்கு வழங்கினால் நன்மையாக இருக்காதா? இறைவனின் மிகவும் பொருத்தத்தைப் பெறாதா?
அல்லது இப்தார் நடாத்துபவர்கள் நோன்பு திறக்க வசதியற்ற ஏழைகளையும் சேர்த்து நடாத்த முயற்சிக்க வேண்டும். நாங்கள் நோற்கும் நோன்பை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு, நாங்கள் நல்லமல்கள செய்யவும் எங்களுக்கு அருள்புரிவானாக! ஆமீன்!
சகோதரர் ஆரிப் உங்கள் கருத்துக்கு நான் நேர் படுகிறேன்....
ReplyDeleteஅத்தோடு இன்று ஊடகங்கள் மூலமாக பிரகடனப்படுத்துகின்ற இப்தார்கள் கலிமா சொல்லாத, கல்லையும் , மண்ணையும் , கண்ட கண்ட களுசறைகளையும் கடவுளாக வனங்குகின்றவர்களுக்குத்தான் ஏட்பாடு செய்யப்படுகின்றது.
பாவம் அதி காலை சஹர் முதல் மாலை சூரியன் மறையும் வரை அல்லாஹ்வுக்காக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பு திறக்க ஏட்பாடு செய்ய முடியலயே எம் சமூகத்துக்கு ..
இப்படி நிலமை இருக்கும் போது அல்லாஹ்வின் சோதனை முஸ்லிம்களாகிய எம்மை வந்தடையாமல் எவ்வாறு இருக்க முடியும்.
வசதியற்றவர்கள் பங்கு பற்றினால் பரவாயில்லை ,உண்மையில் தெரியாமல்தான் கேட்கின்றேன் நோன்பே நோற்காத நோன்புக்கு எதிரிகளான,மாற்றுமதத்தினரை வரவைப்பது எந்தவகையில் அடங்கும்,இதற்க்கு நம் மார்க்க அறிஞர்க்கலென்ன சொல்கின்றார்கள்,
ReplyDeleteநமது நற்பன்புகளைப்பார்த்து அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படவேண்டுமேன்றால் அவர்களை பெருநாளைக்கு அழைத்து விருந்துகொடுக்கலாம்தானே!
இன்று இப்தார் நிகழ்வுகள் பெயருக்கும்,புகழுக்கும்,வீன்விரயத்துக்குமே முன்னிலைப் படுத்தப்படுகின்றது .ஏழைகளை அழைக்காது தனவந்தர்களும்,செல்வாக்கு மிக்கவர்களும், அரசியல்வாதிகளும்,அன்னியர்கலுமே இன்றைய இப்தார்களின் முன்னிளைவாதிகள்.எமது ஊரில் நாமும் 500 பேருக்கு,1000 பேருக்கு இப்தார் செய்தோம் என்கின்ற புகழ் பாடல்களே இன்று முதன்மைப் படுத்தப்படுகின்றது.எமது இப்தாரில் கோழிக் காஞ்சி ,ஆப்பிள்,தோடம்பழம்,மென்பான பாட்டில் ,தண்ணீர் பாட்டில்,சமூச,பெட்டிச்,கட்லஸ் இப்படியாக எல்லாமாக பிளாஸ்டிக் பாக்ஸில் விநியோகித்தோம் இப்படியான புகல்பாடல்தான் இருக்கும்,இத்தனைக்கும் பொதுவாக சேகரிக்கப் பட்ட பணமே வீண்விரயமாக செலவழிக்கப் படுகின்றது. இதனை இல்லை என்று கூருகின்றிர்களா?.ஒரு அடியான் இருவேலையில் சந்தொசமடைகின்றான் ஒன்று தனது ரப்பைசந்திக்கும் வேளையில்,மற்றையது நோன்பு திறக்கும் வேளையில் உண்மையில் இவர்களின் இப்தாரில் இந்த நிலைமை ஏற்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே ???? இருக்கின்றது.அல்லாஹ்வே போதுமானவன்.
ReplyDeleteWho was started these kind of activities:
ReplyDeleteMiss:Azwar MP
Miss:Alavi MP
Miss:Fawzi MP
Miss:M.H.Mohamed etc...
All created these activities, now all follow it in a vast range........
மேற்குறிப்பிட்ட கருத்துக்களோடு இன்னுமொரு முக்கியமான விடயமும் உள்ளது.
ReplyDeleteஅதாகப்பட்டது மகாஜனங்களே.. இந்த இப்தார்களில் பல கோணங்களில் அறபு எழுத்துக்கள் கொண்ட பேணர்கள் கட்டப்பட்டு அல்லது ஏற்பாட்டாளர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டு வீடியோ எடுக்கப்படுகின்றன.
பின்னர் அடுத்த வருஷம் றமழான் மாதத் தொடக்கத்திலேயே இந்த வீடியோ கெஸட்களோடு அறபு நாடுகளுக்கு விமானம் ஏறுகின்றனர்.
அங்குள்ள அறபிகளுக்கு இந்த வீடியோவைக் காட்டிக் காட்டி இப்தார் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கின்றனர். சேரும் பணத்தில் ஒரு பகுதி இவ்வருட இப்தாருக்குப் போக மறு பகுதி "மறுமை நாள் விசாரணைக்காக" எங்கோ மறைத்து வைக்கப்படுகின்றது.
இவ்வாறு எமதூரைச் சேர்ந்த மதனி ஒருவரும், அரசியல்வாதி ஒருவரும் இவ்வருடம் றமழானில் விமானம் ஏறிச் சென்று சில நாட்களின் முன்னர்தான் திரும்பியுள்ளனர்.
இப்போது சிறிய அரிசி மூடைகளை வழங்கி வருகின்றனர். இனி இப்தார் நிகழ்வுகளும் நடாத்துவார்கள்.
இந்த வெளிநாட்டுப் பறப்புக் காலத்தில் அந்த மதனியின் வாப்பா இறையடி சேர்ந்த போதும் அவர் ஜனாஸா நல்லடக்கத்திற்கும் வரவில்லை.
இப்படியெல்லாம் வீண் விரயம் ஒருபக்கம், தம்பட்டம் மறுபக்கம், பதுக்கல் இன்னொரு பக்கம் என இந்த இப்தார் நிகழ்வுகள் சீரழிகின்றன.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
நபி ஸல் கூறினார்கள் விருந்திலே மிகவும் கேடு கெட்ட விருந்து பணக்கார்கள் மட்டும் இருக்கும் விருந்தாகும்
ReplyDelete