உள்ளத்தின் உணவு நோன்பு
(றுமைஸா பஷீர் Cairo - Egypt)
என்னை மென்மையாக ஆக்கியதால்
என்னவோ உன்னை பெண்மையாகவே கருதுகிறேன்
அச்சம் மடம் நாணம்
பயிர்ப்பு இதனால்தானே உன்னில்
எனக்கீர்ப்பு
வருடமொருமுறை சந்திப்பதால்
உன்னால் எங்கும்
சதா மகிழ்ச்சி
மாலை மங்கும் நேரம்
ஒரு மகிழ்ச்சி மறுமையில் ஏகன் காண
மறு மகிழ்ச்சி
பூங்காற்றும்
போர்வை கேட்கும் குளிர்
வெயில்
காற்றும் வேர்வை சொட்டும் வெயில்
ஆனாலும் நெஞ்சில் ஈரம் ஈரம்தான்
காற்றழுத்தம் எனை ஈர்த்தால் என்ன ?
கார்மேகம் எனை நனைத்தால் என்ன ?
பதினொறு மாதம் செய்த
தீமைக்கு பதினொன்றால்(தராவீஹ்)
தீர்ச்சை என்றால்
விரதம் கொண்டு முக்தி பெற்று மோட்சம்
பெற என்ன தடை
மரியானா ஆழியில் முத்துக்குளிக்க
நேரிட்டாலும்
நைல் நதி எனக்கருகில்
நகர்ந்தாலும்
நயாகராவே என்னில்
வீழ்ச்சி கொண்டாலும்
ஒரு சொட்டு நீர்
உள்நாக்கில் உரச விடேன்
என்னை எவர் எதிர்த்தாலும் நான்
எவரையும் எதிர்க்க நேரிட்டாலும்
இருவர் முரண்பாடு கலைக்க மூன்றாம்
தரப்பு உன்பெயர்தான்
இத்துணை அம்சமும் கொண்ட
உன்னை நான் காதலிப்பதில்
அத்திலாந்திக்
அளவு எதிர்ப்பு வந்தாலும்
என்
இதயவரைகள் துடிக்கும் சத்தம் நீதான்
ஏனென்றால் எனை வரவேற்க நீ செய்த
ஏற்பாடு
"ரய்யான்"
Post a Comment