Header Ads



முஸ்லிம் தலைமைகளை நம்பி சும்மா இருந்து விடாதீர்கள் - சுபைர்


(அபூ பயாஸ்)

ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு இன்று (25-07-2013) காலை ஏறாவூர் அஹ்மத் பரீட் வித்தியாலய பழைய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் கலந்துகொண்டதோடு,ஏனைய அதிதிகளாக பிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் ,பிரித்தானிய முஸ்லிம் சமூக இணைப்பாளர் சகோதரர் அப்துல் ரஸாக் ,ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி அல்ஹாஜ் Dr எம்.எச்.எம்.தாரிக் ஆகியோரோடு அப்பகுதி முக்கியஸ்தர்களும்,பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அவர்கள்,

"இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற சதிகளுக்கு எமது முஸ்லிம் தலமைகள் எங்களை காப்பாற்றும் "என்று மட்டும் இருந்து விடாதீர்கள்,புனித நோன்பு மாதமான இத்தருணத்தில் ஒவ்வொரு தொழுகையிலும் எமது சமூகத்துக்காக துஆ செய்யுங்கள். தலைமைகளால் எதுவும் செய்யமுடியாதவாறு நாட்டின் சூழ்நிலை காணப்படுகிறது என்றார்.

எமது தலைமைகள் எல்லாம் உரிமை அரசியலிலிருந்து நழுவி,அபிவிருத்தி அரசியலுக்கு பின்னால் சென்றுள்ளதால் உரிமை பற்றி கதைக்க முடியாமலுள்ளனர் என்றும் கூறினார்.

ஏறாவூர் நகர முஸ்லிம் குழந்தைகளுக்கு பால்மா சத்துணவை விநியோகம் செய்த பிரதித் தவிசாளர் அவர்கள் ,ஏறாவூர் பற்று வெலிக்கான்க்கண்டி பிரதேச தமிழ் சகோதரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்களும்,பால்மா பக்கட்டுக்களும் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நல்ல கத நெடுப்பமில்ல , உங்களைப் போன்ற சூடு சொறனை இல்லாத சில்லறைகள் இருக்கும் வரை உரிமை கிடைக்காது எருமைதான் கிடைக்கும் .

    ReplyDelete
  2. நீங்களும் ஒரு அரசியல் தலைமைதானே..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.