யாழ்ப்பாணத்தில் சிறாஸ் போட்டி - வேட்பு மனுவிலும் கைச்சாத்திட்டார்
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்காக மொஹமட் சிறாஸ் சற்று முன்னர் வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த வேட்புமனுவிலேயே அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில சுதந்திரக் கட்சி சார்பில் அவர் போட்டியிடவிருந்த போதிலும் பின்னர் அவருடைய பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அகல இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக அவர் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான மௌலவி சுபியான் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுவில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தால் சகலருமறிக:
ReplyDeleteசகோதரர் சிராஸ் அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றிலுமாகக் கைவிட்டு விட்டது.
எனினும் ஆளுந்தரப்புடன் இணைந்திருக்கும் எமது அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக அவரது தலைமையிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர்கள் இடமளிக்காவிட்டாலும் ஆளுந்தரப்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் யாழ். மாவட்டத்தில் இன்னமும் வெற்றிடம் உள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, சகோதரர் சிராஸ் அவர்கள் இப்போதாவது ஸ்ரீ.ல.சு.கட்சித் தலைவரின் மஹிந்த சிந்தனைகளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
பின்னாளில் எமது சுபியான் மௌலவி அவர்களும் இவ்வாறு அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்வார் என்றே சமூகம் எதிர்பார்க்கின்றது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
when will they learn? our people will never learn. They need to still go behind powers but not for rights.
ReplyDelete