முதுகெலும்பில்லாதவர்களின் பின்னால் பயணிக்கும் முஸ்லிம் சமூகம்..!
(அல்மாஸ்)
நாட்டில் என்ன நடக்கிறது என்பது அநேகர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பணமும், பட்டமும் மாத்திரமே. என்ன செய்தாவது சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக ஓடோடி உழைத்து பணத்தைத் தேடினால் போதும் என்ற மனப்பாங்கில் ஒரு கூட்டம். இருக்கும் பதவியிலிருந்து யாரையாவது வெட்டி வீழ்த்த்தி விட்டு எவர் காலைப் பிடித்தாவது உயர்பதவியை அடைய வேண்டுமென்று சதா சிந்திக்கும் மற்றுமொரு கூட்டம்.
தஹ்வா பணியில் ஈடுபடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு கிணற்றுத் தவளைகளாய் தகவல் தொடர்பு சாதனங்களின் எவ்வித தொடர்புமில்லாமல் தெரியும் இன்னொரு கூட்டம், மக்களை விழிப்படையச் செய்யாது, அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய சாதனங்களினூடாக விடயங்களைத் தெளிவுபடுத்தாது, தமது பேனா முனைகளால் வெறும் கற்பனை கொண்டு கவிதைகளயும் கதைகளையும் எழுத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் இன்னுமொரு கூட்டம். இவ்வாறு இன்னும் இன்னும் பல கூட்டங்கள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளனர். இவர்கள் தாங்களும் தங்கள் வேளைகளும் என்று திரிந்து கொண்டிருக்கும் நிலையில் இக்கூட்டங்களையெல்லாம் மடையர்களாக்கி, இக்கூட்டங்களின் மீது சவாரி செய்து, அரசியல் பிழைப்பு நடத்தும் முதுகெலும்பில்லாத கோழை அரசியல் தலைமைகளையும், இருக்கும் உறுப்பினர்களை மடையர்களாக்கி, அவர்களைச் சிந்திக்கச் செய்யாது, அவர்களின் புதிய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காது, நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் வளம் வரும் சபைகளின் தலைவர்களையும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம் நம்பியிருக்கப்போகிறோம் இந்நாட்டில் நாம் எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடிகளுக்கு இவர்கள் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று. ஏமாந்த காலமும் ஏமாற்றி காலமும் போதும். இனியும் நாம் ஏமாந்து கொண்டிருக்க முடியாது?
மகியங்கனைப் பள்ளிவால் மூடப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்த ஒரு வார காலத்துக்குள் இப்பள்ளிவாசலைத் திறந்து அதில் தொழுகை நடத்த எந்நவொரு அரசியல் தலைமையினாலோ, சபைத் தலைவர்களாலயோ முடியவில்லை. எதிர்வரும் 2ஆம் திகதி பொதுபல சேனாவினால் நடத்தப்படவுள்ள மாபெரும் பேரணியின்போது இப்பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்ற அச்சத்தில் மகியங்கனையிலுள்ள முஸ்லிம்கள் உள்ளனர்.
அது ஒரு புறமிருக்க, இதுவரை இப்பள்ளிவாசலின் தற்போதைய நிலை என்னவென்பதை எத்தனை அரசியல் தலைமைகள் நேடியாகச் சென்று பார்த்திருப்பார்கள். சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 'இப்தார்' எனும் பெயரில் பணத்தை வீண்விரையம் செய்து, சுய விளம்பரம் தேடும் அமைப்புகளின் தலைவர்களில் எத்தனைபேர் இப்பள்ளிவாலையும் அதைச் சூழுவுள்ள முஸ்லிம்களையும் சென்று பார்த்திருப்பார்கள். நீங்கள் பெயருக்காகவும் பெறுமைக்காவும், போட்டிக்காகவும், சுயவிளம்பரத்துக்காகவும் செய்கின்ற இந்த இப்தாரினூடாக இதுவரை நீங்கள் அடைந்துகொண்ட சமூக ஒற்றுமை எவை? சமூக இணக்கபாடு எவை? எத்தகைய உண்மையான புரிந்துணர்வை பிற மதத்தவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். சமூக ஒற்றுமைக்காக மேற்கொள்ளும் உங்களது இப்தாருக்கு வந்த பிறமதத்தவர்களைக் கொண்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மகியங்கனையில் ஒரு அமைதி ஊர்வலத்தை நடத்த முடியுமா?
கேவலம் தலைநகர் கொழும்பிலாவது பள்ளிவாசலைத் திறக்கக் கோரி உண்மைக்கு உண்மையாக சமூக ஒற்றுமையுடையவர்களைக் கொண்டு ஒரு போரணியை நடத்த முடியுமாறு. குறைந்த பட்சம் சமூக ஒற்றுமை சமூக ஒற்றுமை என்று வருடா வருடாம் நீங்கள் நடத்தும் இப்தாருக்கு வந்த பிற மதத்வர்கள் ஆயிரம் பேரிடமாவது மகியங்கனைப் பள்ளிவாசலைத் திறக்கக்கோரி கையெழுத்துக்களைக் பெற முடியுமா? யாரை நீங்கள் ஏமாற்றுகின்றீர்கள்?
இன்று நமது சமூகத்தில் குடியிருக்க வீடு இல்லாத, குடிக்கத் தண்ணீர் வசதியில்லாத, கழிவகற்ற கழிவறை இல்லாத, வெளிச்சத்துக்கு மின்சாரமில்லாத, கல்விக்குச் செலவழிக்கப் பணமில்லாத, ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாத எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் அவதிப்படுகிறார்கள். புனித ரமழான் மாதம் பிச்சைக்காரர்களின் மாதம் என்று பிற மதத்தவர்கள் சொல்லும் அளவுக்கு கடை, கடையா, வீடு வீடாக, தெருத்தெருவாக ஏழை முஸ்லிம்கள் அழைந்து திரிவதை நீங்கள் காணவில்லையா? இவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது யார்.
நீங்கள் இந்த நோன்பு நாட்களில் வெறும் பெறுமைக்கும் சுய விளமபரத்துக்குமாக இப்தார் எனும் பெயரில் வீண்விரையம் செய்யும் பணத்தினால் ஒரு குடும்பத்துக்காவது மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதா அல்லது மலசல கூடத்தைக் கட்டிக்கொடுக்க முடியாதா? அல்லது குடி நீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத? அல்லது கல்வி கற்பதற்கு பணமில்லாது திண்டாடும் மாணவன் ஒருவனுக்கு புலமைப் பரிசில் வழங்க முடியாதா? ஏன் உங்களால் சிந்திக்க முடிவிதில்லை. வீண்விரையம் செய்வதற்காக, சுய விளம்பரத்துக்காக போட்டிபோட்டு இப்தார் செய்யும் நீங்கள், உங்களை சுவர்க்கம் இட்டுச் செல்லும் நிலையான தர்மத்தை செய்வதற்கு போட்டி போடாமல் இருப்பதேன். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள. 'உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரையம் செய்யாதீர்கள்' என அல்குர்ஆண் கட்டளையிடுகிறது.
அவை அவ்வாறு இருக்கையில், நேற்றுக்களில் நாம் நிம்தியாக இந்நாட்டில் வாழந்;தோம். ஆனால் நாளைய நாட்களில் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் சுய கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமாயின் உண்மைக்குண்மையாக சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய, உரியவாறு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய, சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு இராஜதந்திர ரீதியில் முகம்கொடுத்து வெற்றி காணக் கூடிய, புதிதாகச் சிந்தித்து திட்டமிட்டு செற்படக் கூடிய தலைமைத்துவம் மிக அவசரமாகவும் அவசியமாகவும் நம் சமூகத்தில் இனங்காணப்படுதல் அவசியம்.
எவ்வித சுயநலமுமற்ற, சகலவற்றிலும் தன்னிறைவு கண்ட, சமூகத்துக்காகக் சதா சிந்திகக் கூடியவர்கள் நம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் தங்களை இனங்காட்டாமல் உள்ளனர். அல்லாஹ்வுக்காகவும் சமூகத்துக்காகவும் எதிர்கால நமது தற்போதைய குழந்தைகளுக்காகவும் இத்தகையவர்கள் முன்வந்து சமூகத்தை வழி நடத்த வேண்டும். அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும் தங்களது சக்திக்குட்பட்ட வகையில் மேற்கொள்ள வேண்டும. வெறுமனே, தற்போதுள்ள முதுகெலும்பற்ற அரசியல் தலைமைத்துவங்களின் பின்னாலும் கூஜாத்தூக்கிகளாக செயற்படும் சபைத் தலைவர்களின் பின்னாலும் நாம் பயணித்து நமது காலத்தை வீணடிப்பதில் எதையும் அடைந்துவிட முடியாது என்பதை நெஞ்சில் நிறுத்திச் செயற்படுவோமாக! வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!
ஓ.. நம்ம சமூகத்திலும் இவ்வாறு வித்தியாசமாகச் சிந்திக்கக்கூடியவர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது..!
ReplyDeleteஇப்போதிருக்கின்ற 'அடுப்புக்கல்' அரசியல் தலைமைகளையும், அவர்களின் கால் வால்களையும் விட்டால் நமது முஸ்லிம் சமூகத்திற்கு யார் இருக்கின்றார்கள்? என்றுதான் மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் சிந்திக்கின்றனர்.
அதனால்தான் எந்தத் தேர்தல் வந்தாலும் எமது மக்களை ஏய்த்துப் பிழைத்து அரசியல் குதிரையோட்டும் குதிரை வீரர்கள் நம் சமூகத்தில் நிலைத்து இருக்கின்றனர்.
'அவன் களவெடுத்தால் நமக்கென்ன..? நம் வீட்டுக்குப் போக கொங்றீட் ரோட் போட்டிருக்கானே.. அவனைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும்' என்று சுயநலத்துடன் சிந்திக்கும்; நம்மவர்கள், இந்த வீதிக்கு இத்தனை இலட்சம் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதே.. இது நமது வரிப்பணமல்லவா? நாம் தினம் தினம் சீனி, பால், அரிசி, என்றெல்லாம் வாங்கும் பொருட்களின் ஊடாக நமது பணமல்லவா அரசுக்கு வரியாகச் செல்கிறது?' எனச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவு.
'என்ன இருந்தாலும் என்னக் கண்டால் கை காட்டி விட்டுத்தான் சேர் போவர்' என்ற சொல்லி தனது வாக்குரிமையின் பெறுமானம் தெரியாமல் புள்ளடி போடும் மக்களும் நம்மத்தியிலே உள்ளனர்.
'மூணு மாசத்துக்கு முதல் மௌத்தான எங்கட வாப்பாட மையத்துக்கு சேர் வரக் கிடைக்கல்ல என்டு நேத்துத்தான் வந்துட்டுப் போனவர்' என்று பெருமைப்பட்டு வாக்குகளை வாரிக் கொடுப்பவர்களும் நிறையப் பேர்.
இப்படி தங்கள் பிரதிநிதித்துவத்தின் பெருமை உணராமல் அற்பத்தனமான சில்லறை விடயங்களுக்கும், வாக்களிப்புக்கு முதல் நாள் வழங்கப்படும் தையல் மெஷின், சைக்கிள் கட்டைகள், தகரத் துண்டுகள், அரிசி பேக்குகளுக்காக வாக்குகளைத் தானம் செய்வோரும் மிகப்பலர்.
சமூகம் இந்த நிலையில் இருக்கம்போது பொய்யர்களும், பித்தலாட்டக்காரர்களும், சுயநலவாதிகளும்தான் அரசியல் களத்தில் முன்னணியில் இருப்பார்கள்.
கட்டுரையாளர் சொல்வது போல் கடந்த 20 ஆண்டுகளில் ஜாமிஆ நளீமியாவிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசியல், மார்க்கம், சமூகப் பெறுமானம், தனது சமூகக் கடமை என்பதையெல்லாம் கற்றுத் தேர்ந்து படித்து பட்டம் பெற்ற வெளியானவர்களெல்லாம் எங்கே போனார்கள்...?
ஏன் இவர்களாலெல்லாம் முன் வந்து நமது சமூகத்திற்கு புதிய அரசியல் வரைவிலக்கணங்களையும், விளக்கங்களையும் சொல்லி அப்பெறுமதிவாய்ந்த அமானிதப் பொறுப்புக்களைச் சுமக்க முடியாதா?
'நீ கண்ணதாசன்தான் சிறந்த கவிஞன் என்று நம்பிக் கொண்டிருக்கும் வரையில் உன்னால் இன்னொரு வைரமுத்துவை சிநறந்தவனாகக் காண முடியாது' என எங்கோ வாசித்த வரிகளில் நம் சமூகத்திற்கும் யோசிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்
அய்யாமுல் ஜாஹிலிய்யாக் காலத்தில் நடைபெற்ற இன்றை 'பத்ர்' கள தினத்தில்தான் இஸ்லாமிய சாமராஜ்ய எழுச்சிக்கான ஒரு திருப்பமே ஏற்பட்டது. ஆனால் இலங்கை முஸ்லிம்களான நாம் இன்னமும் 'பதர்' களத்தில் நின்றுதான் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி எமது இலங்கையிலாவது இஸ்லாம் ஓம்பும்?
புதிய அரசியல் கொள்கைகளும், புதிய அரசியல் தலைமைத்துவங்களும் நமது நாட்டுக்கு அவசியம் தேவை.
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் 'பழையன கழிந்து புதியன உள் வர' நாமனைவரும் பிரார்த்தித்து புத்தி பூர்வமாகச் செயற்படுவோமாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இது தான் உண்மை Brother.. இத எல்லாருமே புரிஞ்சு நடந்துகிட்ட ஏன் இந்த பிரச்சன...
ReplyDeleteநீங்க சொனது உண்மைய்லே சரி.. ஒருத்தனச்சும் மஹியங்கன பள்ளிவாசலுக்கு போய் என்ன எண்டு கேட்கவும் இல்ல.. அத திறக்குறதுக்கு ஒனும் பண்ணவும் இல்லே... இதெல்லாம் இப்போ நம்மட முஸ்லிம் சமுகத்துக்கு ஒரு படிப்பு...இனியாச்சும் கொஞ்சம் சிந்திச்சி செயல் படடும்.. அவன் அவன் அவன்ட தேவைக்கு மட்டும் வருவான்..
election எண்டா மட்டும் ஊருக்கு வந்து அந்த பள்ளிய நாங்க கண்டிக்குரம் .இத நாங்க கண்டிக்குரம் எண்டு சொல்லுவானுகள் பிறகு சத்தமே போட மாட்டானுகள்...
பிச்ச காரண விட மோசமனவனுகள் இதுக்கு இவனுஹல் பிச்சையே எடுக்கலாம்..
போன election டிமேலே தம்புள்ள பள்ளிவாசல் பத்தி பேசி vote எடுதனுஹல்..இந்த electionle இந்த பள்ளிவாசல் அப்டியே போறது தான் நம்மட சமுகம் . .. அவன் ஒருத்தன் தான்.. நாமதான் அவனுக்கு பிச்ச போட்றம்.. நம்மட கைலேதான் எல்லாமே இருக்கு.. அல்லாஹ்கிட்டே பாரம் கொடுத்துடு காலத்துள்ளே இறங்குவோம்.. நம்மட உரிமைய நாம்தான் கேட்கணும். இப்டியே பார்த்துடு இருந்த ஊர்ரண்ட மாட்டருது உம்மட பேருலே கத்தம் கொடுப்பனுகள்.. கொஞ்சமாச்சும் சிந்திச்சு நம்மட சமுகத்துக்க நாம வேல செய்வோம்..வருங்கள சந்ததியாச்சும் நல்ல வாழறதுக்கு வழி செய்வோம்...
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் will Help Us ...