முர்சி்யை கவிழ்க்க பண உதவி செய்த அமெரிக்கா - ஆதாரங்களுடன் அம்பலம்
(INNE) எகிப்திய அதிபர் முர்ஸி ராணுவ புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட போது அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்தில் தாம் யாருக்கும் சார்பான நிலை எடுக்க வில்லை என்று கூறியிருந்தற்கு மாற்றமாக முர்சியின் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா பண உதவி செய்துள்ளதை அல் ஜஸீரா ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு அமெரிக்க அரசின் ஆவணங்களின் மூலம் 2008 முதலே எகிப்தின் பல்வேறு குழுக்களுக்கு ஜனநாயகத்துக்கான உதவி எனும் பெயரில் அமெரிக்கா உதவி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு சார்பான பல்வேறு சர்வதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பான இஸ்லாமியவாதிகள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தனர். எனவே அரபு வசந்தத்தின் பின் நிகழ்ந்த இம்மாற்றத்தை விரும்பாத அமெரிக்கா இஸ்லாமியவாதிகளின் எதிர்ப்பாளர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது.
முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க வன்முறையை தூண்டி விட்ட எகிப்தில் தேடப்படும் முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி, முஸ்லீம்களின் மசூதிகளை மூடி பிரச்சாரகர்களை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான அரசியல்வாதி என பல்வேறு நபர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் தன் செல்வாக்கை தக்க வைத்து கொள்ளும் விதமாக வருடத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் அமெரிக்கா 390 மில்லியனை ஜனநாயகத்துக்கான உதவி எனும் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் என்.ஜி.ஓக்கள் மூலம் பல்வேறு நபர்களுக்கு வழங்குகிறது.
எகிப்தில் முபாரக் ஆட்சியின் போது புலனாய்வு துறையில் உயர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்த அபிபி சாலிமன் முபாரக் காலத்திலேயே அமெரிக்காவில் அரசியல் அகதியாக புகலிடம் பெற்றவர். 2008 முதல் அவரின் அமைப்புக்கு அமெரிக்கா ஏராளமான நிதியுதவிகளை வழங்கி உள்ளது.
முர்ஸியின் சுதந்திர மற்றும் நீதிக்கான கட்சிக்கு எதிராக தன்னுடைய முக நூலில் பல்வேறு வன்முறை கருத்துகளை சாலிமன் வெளியிட்டு உள்ளார். முர்ஸியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் போது முதலில் அவர்களின் கால் முட்டியில் அடித்து துவம்சம் செய்யுமாறு தன் ஆதரவாளர்களை முர்சியின் அரசுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளார். மேலும் முர்சியின் ஆதரவாளர்கள் கெய்ரோவுக்கு செல்லும் போது பாதையில் பேரீத்தம் மரங்களை போட்டு தடை ஏற்படுத்துமாறு சாலைகளில் டீசல் மற்றும் வாயுக்களை தூவுமாறும் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ள சாலிமன் தடை காரணமாக முர்ஸி ஆதரவாளர்களின் வாகனங்கள் நிற்கும் போது அவ்வாகனங்களை தீ வைத்து கொளுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.
மேலும் முர்ஸிக்கு எதிர்ப்பான தேசிய பாதுகாப்பு முன்னணியின் பல்வேறு தலைவர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட எல் பராதியின் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான் அப்துல் பத்தாஹ் எனும் பெண்ணின் அமைப்புக்கு ஏராளமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இப்பெண் தான் முர்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சாசனத்தை ஆதரித்த மசூதி இமாம்களை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்று போர்கொடி தூக்கியவரும் சமீபத்திய தஹ்ரீர் சதுக்க போராட்டத்தில் முர்ஸிக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைத்தவர். சில வாரங்களுக்கு முன்னமேயே முர்ஸி ஜுன் 30 வரை தான் பதவியில் இருப்பார் என்று அப்துல் பத்தாஹ் கூறியது குறிப்பிடத்தக்கது.
முர்ஸிக்கு எதிராக எகிப்தின் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்த அல் ஹயா கட்சியின் தலைவர் முனீர் 1.3 மில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் தலைவர் எஸ்மத் அல் சதாத் உள்ளிட்ட முர்ஸிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெரும் பங்கு வகித்த பலர் அமெரிக்க அரசிடமிருந்து நிதியுதவிகளை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அரசின் இத்தகைய நிதியுதவி குறித்த சத்தாத் இப்ராஹிம் எனும் அரசியல் விமர்சகர் முர்ஸிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்தால் தான் முர்ஸியின் நீக்கத்துக்கு எதிர்ப்பு இருக்காது என அமெரிக்கா கருதியதாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார். சத்தாத் இப்ராஹிமும் முர்ஸிக்கு எதிர்ப்பானவர் என்பதும் அமெரிக்க நிதியுதவி பெற்றவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
count time start for fucking USA....
ReplyDeleteஇதைத்தான் வல்லரசு என்று நாம் அழைக்கின்றோம். உலகத்திலே நடக்கும் அசிங்கங்களுக்கும் பித்தலாட்டங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் பிறப்பிடம்தான் இந்த அமேரிக்கா.... அசிங்கத்தின் உச்சம்...
அமெரிக்காவின் சதிகளை அல்ஜஸீரா வெளியிடுவதென்பது சிரிப்புக்கிடமானது. உலகின் பெரும்பாலான பிரபல ஊடகங்களெல்லாம் யூதர்களின் கைகளிலுள்ளன. அல்ஜஸீரா உட்பட. அவை அமெரிக்காவின் நலன்களுக்குப் புறம்பாக எதையும் செய்யப் போவதில்லை. இவற்றுக்குப் பின்னாலெல்லாம் பெரிய சதிகளும் சூழ்ச்சிகளும் இருக்கின்றன. தவிர, முர்சி ஒன்றும் தூய இஸ்லாமிய ஆட்சியை எகிப்தில் நிலைநாட்டவில்லை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனும் தீவிரவாதிகளுடனும் அவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தமைக்கு, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற அவரது அச்சமே காரணம். மோசமான வஹஹாபிய இயக்கமான தக்ஃபீரி குழுக்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. தக்ஃபீரி குழுவினர், சக முஸ்லிம்களை காரண காரியங்களின்றிக் கொன்று நாசம் செய்யக் கூடியவர்கள். ஒவ்வொருவரும் தமது செயல்களுக்கான கூலியைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
ReplyDeleteFathi....
ReplyDeleteYour comments shows You are 'Still Born' to this polital affairs...
Fathima Hamda, eangayo copy panny paste panniyamathiri irukku...?
ReplyDeletenega innum valartanum velikalukku appal vanthu ulakai parungal.
wahhaabikalaiyyum thowkkaararkalaiyum patri thawaraaka pechinaal jaffna muslimil idam kidaikkaathu.
ReplyDeleteAre America giving money for every thing?
ReplyDeleteWho is that guy?I need to know him.
amudu sri you also need money contact cia or mozard
ReplyDeleteHamda u must learn more. U r a baby, mursi is great Islamic leader
ReplyDelete