துனிசியாவில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டுக்கொலை..!
துனிசியாவில் எதிர்க்கட்சி தலைவராக முகமது பிராமி (58) பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துனிஷ் நகரில் தனது வீட்டு முன்பு அவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று அவரது இறுதி சடங்கு நடந்தது. அதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பின்னர் அவரது உடல் துனிஷ் அருகேயுள்ள அரியனா என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவரது கட்சியை சேர்ந்த தலைவர் சோக்ரி பெலாஸ்ட் கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சமாதிக்கு அருகே இவரது உடலும் புதைக்கப்பட்டது.
Post a Comment