அரசிற்கு தேர்தல் முக்கியமா? அல்லது ஒரு இனத்தை வஞ்சிக்கும் செயற்பாடுகளை அடக்குவது முக்கியமா?
(சத்தார் எம்.ஜாவித்)
இன்று இலங்கை முஸ்லிம்களின் நிலை குட்டக் குட்ட குட்டுபவனும் மடயன் குட்டுப்படுபவனும் மடயன் என்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
இன ரீதியான அடிப்படையில் ஒருபோதும் நாட்டைப் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கூறி வரும் இத்தருணத்தில் அவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் அவரைச்சார்ந்த பெரும்பாண்மை இன இனவாதிகள் தமது அடாவடித்தனங்கள் குறைந்தபாடில்லை. ஜனாதிபதி சொல்வடிவில் கூறும் செயற்பாட்டிற்கு மாற்றமாக இனவாதிகள் தமது அடாவடித்தனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்வடிவில் காட்டுவதை பார்க்கும்போது இந்த நாட்டில் ஜனாதிபதியின் சொற்கள் குப்பையில் சுருட்டி எறியப்படுகின்ற விடயத்தையே புலப்படுத்துகின்றதாக கருதவேண்டியுள்ளது.
கடந்த 5ஆம் திகதி பேருவளை சீனவத்தை ஜூம்ஆப் பள்ளியை திறந்து வைத்த ஜனாதிபதி இனங்கள் அடிப்படையில் ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் நாட்டில் எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் தனிப்பட்ட இடமொன்று கிடையாது சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் பாதகாப்பிற்கு அரசு முன்னிற்கின்றது எனக் கூறிய ஒருசில தினங்களுக்கு இடையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனாவும், அதன் ஏனைய ஒட்டுக் குழுக்கள் போன்ற சமூக விரோதிகள் பல அடாவடித்தனங்களை செய்துள்ளனர். குறிப்பாக மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளி புனித ரமழானில் இனவாத குண்டர்களால் தாக்கப்பட்டு பன்றி இறைச்சி வீசப்பட்ட விடயம், அரசாங்கத்தால் சட்ட ரிதியாக பதியப்பட்ட பல ஆண்டுகள் வரலாறு கொண்ட கிரேன்ட்பாஸ் பள்ளிவாசலை மூடச் செய்தமை, கடந்த 16ஆம் திகதி தெமடகொடையில் முஸ்லிம் வர்த்தகரின் இறைச்சி லொறி ஒன்று காவி உடை தரித்தவர்ளால் பகிரங்கமாக எரியூட்டப்பட்டமைக் கெல்லாம் யார் பொறுப்புக் கூறுவது?
இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மறைமுகமான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலைமைகளையே காட்டி நிற்கின்றன. இல்லாவிட்டால் சகல பாதுகாப்புக்களும் உள்ள கொழும்பில் பகிரங்க அடாவடித்தனங்களை சாதாரண ஒரு குழு செய்துவிட முடியாது. இவ்வாறான போக்குகள் ஏனையவர்களும் சட்டத்தை புறந்தள்ளி தாமும் சண்டியர்கள் என்ற நிலை உருவாகமுன் அதனை தடுக்க ஜனாதிபதி அதீத கவனஞ் செலுத்தவேண்டும். எனினும் அதற்கான தருணங்கள் தற்போது கைநழுவிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
மஹியங்கனை பள்ளி தாக்கப்பட்டதற்கு கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் முறையிட்டபோது அதற்கு அமைச்சர்களிடம் யார் மீது சந்தேகம் என ஜனாதிபதி கேட்டது முஸ்லிம்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்த்த மாதிரியாக அமைந்து விட்டது. கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்படும் அடாவடித்தனங்கள் யார் என்பது உலகமே அறிந்த நிலையிலும் ஏன் நாளாந்தம் ஊடகங்களில் விலாசத்துடன் சுட்டிக்காட்டப்பட்டு வரும் இவ்வேளையில் ஜனாதிபதியின் கேள்வி மக்களிடத்தில் வியப்பையும், கவளையையும் ஏற்படுத்தியுள்ளதாக புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் மஹியங்கனை பள்ளிவிடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினாலும் அது அதனை முஸ்லிம்கள் நம்பத் தயாரில்லை என்று முஸ்லிம் மத குருமார் தெரிவிக்கின்றனர். இதிலும் உண்மையுள்ளது. அதாவது வாய்ச் சொல் செயல்வடிவம் பெறாத வரை அதனை யாரும் நம்புவதில்லை என்பதே யதார்த்தம்.
இன்று இன ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருபவர்கள் பெரும்பான்மையைச் சேர்ந்த ஒரு சில இனவாதிகள் என்பது உண்மையாக இருக்க ஏன் அவர்கள் மீது சட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை? என்ற கேள்விக்கு பதில் என்ன? இதேவேளை சிறுபான்மையாக இருந்தால் சட்டம் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் என சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இனரீதியில் நாட்டைப் பிரிக்க முடியாது என்ற ஜனாதிபதியின் சொல்வடிவிற்கு நாட்டை இன ரீதியாக பிரிக்கும் முயற்சி மேற்கொள்ளும் இனவாதிகள் மீதான செயல்வடிவிலான சட்ட நடவடிக்கை எப்போது? என மக்கள் வினவுகின்றனர்.
இலங்கையில் பாரியதொரு அழிவை ஏற்படுத்தும் விதத்தில் சில இனவாதக் குழுக்கள் மேற்கொண்டுவரும் காடைத்தனங்களை நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றைக் கண்டு கொள்ளாது இருப்பதும். எது என்ன கெட்டாலும் கெடட்டும் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தி வெற்றி கொள்வதில் கவனஞ் செலுத்தி வருவது முஸ்லிம்கள் மத்தியில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அரசிற்கு தேர்தல் முக்கியமா? அல்லது ஒரு இனத்தை வஞ்சிக்கும் செயற்பாடுகளை அடக்குவது முக்கியமா? என்ற இரு விடயங்கள் முஸ்லிம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையான ஜனநாயகத்தை நிலைபெறச் செய்யவேண்டுமானால் முதலில் மக்களின் வாழ்வை நிலைபெறச் செய்வதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமேயாகும். மக்கள் நிம்மதியற்று துன்புறுத்தப்படும்போது தேர்தல் தேவைதானா?
ஒரு சமுகத்தினை அழிக்கும் நிலையில் ஒரு காடையர் கும்பல் அதனை ஆதரிக்க இன்னும் பல அருவருடிகள் இவையெல்லாம் இலங்கையில் எதிர்கால வளர்ச்சியினையும் ஒற்றுமையையும் அதாள பதாளத்திற்கு இட்டுச் செல்வதற்கான செய்றபாடுகள் என்பதில் ஐயமில்லை.
சமுக அழிவுகளை கண்டு கொள்லாது தேர்தல் வெற்றிதான் தமது எதிர்காலம் என்ற பகற்கனவு நீடிக்கும் என்பதில் அக்கறையாக இருக்கும் அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கைங்கரியமாகவே உள்ளதாக முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று முஸ்லிம்களுக்கு நடைபெறுவது ஒரு பக்கம் குட்டுவதும் மறுபக்கம் தடவுவதமான நிலையே இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களை அரவனைப்பதுபோல் நடிப்பதாகவும் மறுபக்கம் இனவாதிகளால் தொடராக மேற் கொள்ளப்பட்டு அடாவடித்தனங்களை இவர்கள் கண்டும் காணாததுபோல் இருப்பது அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயற்பாடாக மட்டுமல்லாது வெறுப்பையும் ஏற்படுத்தி வருவதையே காட்டி நிற்பதாக புத்தி ஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
காலா காலமாக முஸ்லிம் அரசியல் வாதிகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்ததுதான் மிச்சம் ஏனெனில் அவர்கள் தங்கள் பதவிக்காகவும், சுகபோகங்களுக்காகவும் அரசாங்கத்திற்கு பண ரீதியாக விலைபோனவர்கள். அவர்களின் மூக்கணாங் கயிறு ஜனாதிபதியிடம் இருப்பதால் அவர்களால் நல்லது கெட்டதுக்குக் கூட வாய் திறக்க முடியாது. வசதி வாய்புக்கள் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.
இவ்வாறானவர்களுக்கு சமயம் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன? என்னபாடும் படட்டும் செவிடன் காதில் ஊதியது மாரி சும்மா ஊடகங்களில் பெயர் வரட்டும் என்பதற்காக ஒரு சில அறிக்கைகள். அது எப்படி இந்த அரசாங்கம் தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு, ஜனாதிபதி எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்பதுதான் அந்த அறிக்கைகள்.
எவனாவது ஒருத்தன் மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்குவானா? சமயத்தைப் பாதுகாப்பதற்காக வீதிக்கு இறங்கி மக்களோடு இணையட்டும் அவன்தான் உண்மையான முஸ்லிம் அரசியல்வாதியானவன் என மக்கள் பெருமைப்படுவர்.
ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல முஸ்லிம்கள் நம்பி வந்த ஜமியதுல் உலமா கூட இன்று அரசின் மூக்கணாங் கயிற்றில்தான் ஓடுகின்றது என மக்கள் விசமடைந்துள்ளனர். இவர்கள் எல்லாம் முஸ்லிம் மக்கள் முன் தோன்றாதிருப்பதே எல்லோருக்கும் நல்ல விடயமாகும்.
இவ்வாறு சுயநல வாதிகளினை நம்பி முஸ்லிம் சமுகம் நட்டாற்றில் தத்தளிக்கும் நிலைமைகளே இன்று எற்பட்டுள்ளது. இன்று முஸ்லிம்களின் இவ்வளவு அழிவு நிலைக்கு வந்ததுக்கு முதற் காரணம் முஸ்லிம் அரசியல் வாதிகளேதான் இவர்கள் முழு முஸ்லிம் சமகத்தையுமே முட்டாள்களாக்கி விட்டனர். இந்த முட்டாள் தனங்களை சாதகமாக பயன்படுத்திய இனவாதிகள் தமது கட்டவுழ்த்து விடப்பட்ட அடாவடித்தனங்களை அதிகரித்த வன்னமேயுள்ளனர்.
முஸ்லிம் சமுகங்கள் அரசியலில் பெல்டி அடிக்கும் பம்மாத்துக் காரர்களுக்கு இனியாவது விலைபோகாமல் தனித்தவமான மார்க்கத்தை பாதுகாக்கக் கூடிய புத்தி ஜீவிகளை அரசியலின்பால் கொண்டுவரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். இதன் மூலமே எதிர்காலத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களும் வளர்ச்சிபெறும் மாறாக பழைய குருடி கதவைத் திற மாதிரி இருப்போமானால் இஸ்லாம் இலங்கையில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்று மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் இத்தருணத்தில் முஸ்லிம்கள் தமது சமயத்தின் பாதுகாப்பிற்கான அதிகாரங்களை தம்வசப்படுத்துவதற்கான ஒரு தேர்தல் களமாக மாகாண சபைகளில் தமது எதிர்புப் பலத்தை காட்டும் சமுகமாக முஸ்லிம் சமுகம் மாறவேண்டும் என சமய விரும்பிகள் ஆதங்கப்படுகின்றனர்.
எனவே இனியும் முஸ்லிம் சமுகம் குட்டுவாங்கும் சமுகமாக இருக்காது குறைந்த பட்சம் அதனை தடுக்கும் சமுகமாக சமயத்துக்கான துணிச்சல் மிக்கவர்களாக தம்மை அடையாளப்படுத்தி இனவாதிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்பதே முஸ்லிம்களின் தேவைப்பாடாகும்.
மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நேரதுள்ளே எதுக்கு இந்த election ?? தேவையா? மக்கள் பிரதி நிதிகள் எதுக்கு?
ReplyDeleteசிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இலாட்டி எதுக்கு இந்த சிறுபான்மை இன பிரதி நிதிகள்??
முதல்லே நாட்டுலே இருக்குறே பிரச்சினைய பார்த்து சரி செய்ங்க..அதுக்கு பிறகு election ,உங்கட பதவி ஆச எல்லாம் சரி செய்ங்க.. முதல்லே மக்களுக்கு ஒரு நல நிரந்தர சமாதனத்த கொடுங்க.
முதல்லே உங்கட வீட சுத்தம் செய்ங்க. பிறகு ஓராண்ட வீட்லே குறை சொல்லுங்க..
சமீபத்தில் பரவலாக ஊடகங்களில் பேசப்பட்ட 'தேசிய சூறா' இந்த நேரத்தில் முன் வந்து தனது கருத்துக்களை வெளியிட வேண்டும்.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான வாழ்வும், இருப்பும், பாதுகாப்பும், வணக்க வழிபாடுகளும் இன்று அரசியல் அதிகாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.
எனவே முஸ்லிம்கள் மூன்று மாகாண சபைகளுக்கு வாக்களிக்கத் தயாராகும் நிலையில் தேசிய சூறா முன்வந்து பொருத்தமான அரசியல்வாதிகளை அடையாளப்படுத்த வேண்டும்.
அதற்கு முன்னதாக அவர்களின் அரசியல் திட்டங்கள், செயற்பாடுகள், பற்றியெல்லாம் தேசிய சூறா கலந்துரையாடி ஒப்பந்தங்களைச் செய்து மக்களுக்கும், அவர்களுக்கும் சீரான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
இக்கட்டான இந்தத் தறுவாயில் இறுக்கமான தீர்மானங்களோடு முன்வந்து அரசியலில் வழி காட்டதா தேசிய சூறா, தேர்தல் முடிந்த பின் அமையப் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இந்த நாட்டில் தேசிய சூறா அவசியம் என்போர், முதலில் முஸ்லிம் சமூகத்தின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரு கட்டமைப்புககுள் கொண்டு வந்து ஒழுங்குபடுத்தாத வரை இன்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கட்சி அரசியலால் விளையப்போகும் மாற்றம் எதுவுமில்லை.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இதில் என்ன ஆச்சரியம் தம்புள்ள பள்ளி விவகாரம் பற்றி முழு உலகமும் பேசிக் கொண்டிருந்த போது அது பற்றி தனக்குத் தெரியாது எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும் என்னிடம் அது பற்றிக் கூறவில்லை என்று கூறிய வடிகட்டிய முட்டால் அல்லவா நமது தலைவர்
ReplyDeleteI appreciate your article,which is absolutely true. Again most of us are aware of these facts.Therefore it would be more helpful if you could suggest either appropriate solutions or steps that will help to bring forward our people as a strong united community and to show our objection to the present government.
ReplyDeleteஇந்த அரசு நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சாபக்கேடு என்பதை இப்போதாவது முஸ்லிம்கள் புரிந்து கொள்வதோடு இந்த அரசையும் அதற்குத்துணைபோகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும்.
ReplyDeleteEither ACJU or National Sura Council may issue Halaal certificate to qualified election candidates, after train them!
ReplyDelete