நிந்தவூர் சோண்டேர்ஸ் கழகம் சம்பியனானது (படங்கள்)
(சுலைமான் றாபி + Umar Ali)
நிந்தவூர் சோண்டேர்ஸ் விளையாட்டுக்கழகம் முதன் முதலாக மின்னொளியில் நடாத்திய சுமார் 12 அணிகள் கலந்து கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டபோட்டி 07-07-2013 நிறைவிற்கு வந்தது. இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நிந்தவூர் சோண்டேர்ஸ் அணி 06 - 00 என்ற கோள் கணக்கில் அக்கரைப்பற்று லவன் AKP அணிய வீழ்த்தி இறுதிப்போட்டியில் சம்பியனானது. இறுதிப்போட்டியில் சாம்பியனான அணிக்கு 10,000/= பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த சுற்றுத்தொடரில் சோண்டேர்ஸ் அணி சார்பாக அதி கூடிய கோளாக 07 கோள்களினை ஏ.எம். பாரிஸ் செலுத்தியிருந்தார். இதேவேளை இன்றைய நிகழ்வில் உதைப்பந்தாட்ட சிரேஷ்ட வீரர்களும், மறைந்த உதைப்பந்தாட்ட வீரர்களின் புதல்வர்களுக்கும் கெளரவமளிக்கப்பட்டது சிறப்பம்சமாக காணப்பட்டது.
இதே வேளை நிந்தவூர் சோண்டேர்ஸ் விளையாட்டுக்கழகதின் தலைவரும், பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த சுற்றுத்தொடருக்கு நடுவர் பணியினை அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட நடுவர் சம்மேளனம் சிறப்பாக நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment