புத்தளம் முஸ்லிம்களின் அரசியல் இலக்குகளுக்கு உறுதுணையாக நிற்போம்..!
(மௌலவி அப்துல் மலீக்)
வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நிர்க்கதியற்றவர்களாக, திராணியற்றவர்களாக, உரிமைகளையும் உடமைகளையும் இழந்து வந்தபோது இஸ்லாமிய உணர்வு கொண்ட எமது நெஞ்ச சகோதரர்களான புத்தள முஸ்லிம் சமூகமும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்களும் தங்களுடைய பொருளிலும் சொத்திலும் சுகத்திலும் கல்வியிலும் எம்மவர்களுக்கு பகிர்ந்தளித்தது அந்த அன்சாரி சகாபாக்களுடைய முன்மாதிரியை இவர்களும் வெளிப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் இணைப்பின் பாலமாக விளங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறாக இஸ்லாமிய சமூகத்தின் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் நேர்த்தியாக செய்து முடித்தார்கள் அல்லாஹீத்தாஆலா இவர்களுடைய உள்ளத்தில் ஈமானுடைய பிரகாசத்தை வெளிப்படுத்தி இவ்வாறாக முன்னுதாரணமாக திகழ்வதற்க வழிப்படுத்தினான். இவ்வாற பாடுபட்ட உதவியளித்த அந்த பெருந்தகைகளுக்கு அடிமனதிலிருந்து அல்லாஹுத்தாஆலா மேலான கூலியையும் அவனது பொருத்தத்தையும் வழங்குவானாக ஆமீன்..
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வடக்கு முஸ்லிம்கள் காலம் இருபதையும் தாண்டி புத்தள சுமார் 7500 பேர் வாக்களிப்பதற்காக மாறியுள்ள சூழ்நிலையில் நாம் புத்தளம்த்தில் வாழ் மக்களுக்கும், புத்தள சமூகத்திற்கும் அவர்களின் அரசியல் இலக்குக்கும் உறுதுணையாக நமது வாக்கு பலத்தை நிதானமாகவும் தூர நோக்குடனும் செலுத்துவது சாலச்சிறந்ததாகவும், நன்றியுணர்வுள்ளதாகவும், அது நன்றியுள்ள சமூகத்தின் வெளிப்பாடாகவும் அமையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கும் நன்றியுள்ளவனாக ஆகமாட்டான்' இந்த அடிப்படையில் அரசியல் பலம் மெல்ல மெல்ல புத்தள மாவட்ட முஸ்லிம்களிலிருருந்து நகர்ந்த கொண்டிருக்கும் வேளையில் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அந்த அரசியல் பலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாளர்களாக மாறுவோம்.
i am not understand what he will try to say
ReplyDelete