Header Ads



புத்தகயா தாக்குதல் மிலேச்சத்தனமானதும் மனிதாபிமானமற்றதும் - உலமப சபை கண்டனம்

உலக பௌத்தர்களின் புனிதத் தளமான புத்தகயாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். உலகில் நிகழ்ந்துவரும் சமய, சாதி வன்செயல்களுள் மோசமான ஒன்றாகவே குறித்த செயல் கணிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களை படுகாயமடையச் செய்யும் இத்தகைய வன் செயல்கள் மூலம் யாதொன்றையும் சாதித்து விட முடியாது. சமயங்களை இத்தகைய வன்முறைகள் மூலம் அழித்து விடலாம் என எண்ணுவதும் அறிவீனமாகும். இத்தகைய எண்ணம் கொண்டோரின் செயல்களே இவ்வாறான தொடர் குண்டு வெடிப்புக்களாகும். 

மனிதாபிமானமற்ற இச்செயலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இந்நாட்டு முஸ்லிம்களும் வன்மையாக கண்டிக்கின்றனர். இந்த தீய செயலில் ஈடுபட்டோர் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்புக்குறியவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

7 comments:

  1. அப்பாடா ரொம்பநாளைக்கு அப்புறம் ஜமியதுல்உலமா வாய் திறந்திருக்கிறது.... பொதுவாக அரசாங்கத்துடன் மட்டுமே பேசுவோம்... வேறு எதுக்கும் வாய் திறக்க மாட்டோம் என்று கூரிய உலமாசபை இதற்கு வாய் திறந்திறந்துஇருப்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது... ஹலாளுக்கு பிறகு வாய் திறந்து இருக்கும் உலமா சபை இந்த ஹிஜாப் விசயத்திலும் ஆரம்பத்தில் வாய் திறக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. This is an unnecessary statement which will let Buddhist think as an apology statement. Did you find any Tamil parties making such an statement?.
    Jamiyathul Ulema should step aside from trying to engage in unnecessary politics.
    You know the indian situation where almost all attacks so far carried out are done by Vishwa Hindu Parishet but they have alleged innocent Muslims for that.

    ReplyDelete
  3. பர்மாவில் கொடூரமாக தாக்கப்படும் முஸ்லிம்களுக்காக இவ்வாறான ஒரு அறிக்கை வெளிவிடவில்லையே. இதை வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் பர்மா கொடூரங்களுக்கு எதிராக ஒரு அறிக்கை விட்டிருக்க வேண்டும். "மனிதாபிமானமற்ற இச்செயலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இந்நாட்டு முஸ்லிம்களும் வன்மையாக கண்டிக்கின்றனர். இந்த தீய செயலில் ஈடுபட்டோர் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்புக்குறியவர்களைக் கேட்டுக் கொள்கிறது". இந்த தைரியம் அப்போ எங்கே போனது?

    அல்லாஹ்வை விட ராஜபக்ஷே களுக்கும் பௌத்த இனவாதிகளுக்கும் பயப்படுகிறீர்கள். அவமானம்.

    BETTER TO SAY YOUR KALIMA AGAIN

    ReplyDelete
  4. indiyavil nadakkum visayangalukku naangal kavalaipadathevayillai anku padipparivu 20% thaan.

    ReplyDelete
  5. Grandpas Masjith Close .................?
    Palli Udaikkinrapothu Mownam.........?
    Muslim Thakkapadum Poathu Mownam......?
    Kapaya Kalattrum Poathu Mownam.......?
    Parliament Pandi Erachy Anumathi.............?
    Erachy Kadai Udaikkinrapothu .............?
    Allah Enthe Ulakiel Thandanai Niechchayam..............?
    ==========Kalmunai Mohamed Fowse++++++++++++++

    ReplyDelete
  6. muslimkalin palliwaasalkal udaikkappadda pothu onru waaipesa wakkillaathawarkal vikaarai vidayathil vizhippaaka iruppathu viyappinai etrpaduthukirathu.

    ReplyDelete
  7. ACJU and MCSL have been competing to release statements condemning the blast yet nobody claimed responsibility to the incidents....However, it is absurd these bodies have not released any statements about atrocities on Burma Muslims...the so called leaders should be assertive and don't be apologetic for every incident happening in the world....

    ReplyDelete

Powered by Blogger.