Header Ads



புத்தளம் மாணவர்களின் கைப்பணி கண்காட்சி


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் நான்காம்  குறுக்குத் தெருவில் அமைந்துள்ள PUTTALAM PRIMARY SCHOOL AND CHILD CARE CENTRE சர்வதேச பாடசாலையில் 08-07-2013 மாணவர்களின் கைப்பணி கண்காட்சி இடம் பெற்றது.

பாடசாலையின் பணிப்பளார் திருமதி.சமீலா நஸ்மி தலைமையில் இடம் பெற்ற இந்த காட்சியின் நிகழ்வுகளை வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசான்த ஆரம்பித்து வைத்து.மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ்,முஸ்லிம்,சிங்கள மாணவர்கள் கல்வி பயிலும் இந்த சர்வதேச பாடசாலையில் மாணவர்களினால் தமது கலாச்சாரம்,மற்றும் புத்தளம் நகரத்தின் பல்வேறு நினைவு சின்னங்கள் மற்றும் துறைகளை பிரதி பலிக்கும் படைப்புக்களை காண முடிந்தது.

இந்த நிகழ்வில் புத்தளம் நகர முன்னால் முதல்வர் எம்.என்.எம்.நஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.