''அரபுலகில் புதிய சிரியா உருவாவதை தடுக்க வேண்டும்'' - இஹ்வானுல் முஸ்லிமின்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவானோர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் எகிப்தில் பதற்ற சூழலை மேலும் உக்கிரமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் கெஹாத் ஹதத் கூறியுள்ளதாவது,
எமது இரத்தம் ஏனைய எகிப்தியரின் இரத்தத்தை விடவும் மலிவானது. அதனை எவரும் கணக்கில் எடுக்கப்போவதில்லை என அவர்கள் நினைக்கிறார்கள்” என்று ஹதத் குறிப்பிட்டார்.''அரபுலகில் புதிய சிரியா உருவாவதை தடுக்க வேண்டும்'' - இஹ்வானுல் முஸ்லிமின்
என சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் ஹதத் கூறினார்.
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ புரட்சிக்கு பின்னர் முர்சி ஆதரவு, எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் வன்முறைகளில் பலர் கொல்லப்பட்டதோடு, 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதனிடையே ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கெய்ரோவிலிருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சி தலைமையகம் நேற்று அரசினால் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மக்கள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இராணுவ சதிக்கு பின்னர் இடம்பெறும் படுகொலைகளை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“புரட்சியை இராணுவ டாங்கிகள் மூலம் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக எகிப்து மக்கள் திரண்டு எழ வேண்டும்” என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி அறிவித்துள்ளது.
“எகிப்தில் மேலும் படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுக்க சர்வதேச சமூகம், சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகின் அனைத்து சுதந்திரமான மக்களும் தலையிட வேண்டும். அரபு உலகில் புதிய சிரியா ஒன்று உருவாவதை தடுக்க வேண்டும்” எனவும் அந்த கட்சியின் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முர்சி ஆதரவாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின் இரு எகிப்திய இராணுவத்தினரை ஆயுதம் ஏந்திய முர்சி ஆதரவாளர்கள் தடுத்து வைத்திருந்தனர். எனினும் இந்த இராணுவ வீரர்கள் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். இந்த இராணுவ வீரர்களை பிடித்த ஆயுததாரிகள் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றி ஒலிபெருக்கி ஊடே முர்சிக்கு ஆதரவாகவும் இராணுவத்திற்கு எதிராகவும் பிரசாரங்களை செய்துள்ளனர்.
Post a Comment