காத்தான்குடி வைத்தியசாலைக்கு மதர் ஸ்ரீலங்கா அமைப்பின் சிறுவர்கள் விஜயம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ஒரு நீண்ட கால கருத்திட்டமாக 2008 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மதர் ஸ்ரீலங்கா அமைப்பு சிறுவர்களிடையே ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை தற்போது கிழக்கு மாகாணத்தில்; பல பகுதிகளில் மேற் கொண்டுவருகின்றது.
இத்திட்டத்தில் கீழ் முதற்கட்டமாக மதர் ஸ்ரீலங்கா அமைப்பின் மட்டக்களப்பு பாடசாலை சிறுவர்கள் குழு நேற்று(புதன்கிழமை) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கியதுடன் சிறிய அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி அவர்களோடு சிநேக பூர்வமாக பழகினர்.
இங்கு சிறுவர் பாடல் போன்ற கலை கலாசார நிகழச்சிகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழச்சித்திட்டத்தில் மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் பாடசாலை மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆசிரியைகளான திருமதி வசந்தினி நேரு, மற்றும் திருமதி பராசக்தி ரட்ணா சபாசிறி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் அதன் ஊழியர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
மதர் ஸ்ரீங்கா நம்பிக்கைப் பொறுப்பு அரச மற்றும் தனியார்துறை அறிஞர்களின் ஜாளகீ குரப்பு தபாகர் தலைவரின் தலைமைத்துவத்தினால் தனியார்துறை நன்கொடையாளர்களின் உதவிகளுடன் தமிழ்-முஸ்லிம்,சிங்கள்,கிறிஸ்தவ ஆகிய இன மத வேறுபாடின்றி எல்லோரும் ஸ்ரீலங்கியர் எனும் தொனியில் தனது செயற்பாடுகளை நாடு தளுவிய ரீதியில் அமைத்து வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment