ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நிறுத்த முடியாத சுவிஸ் தொழிலதிபர் தற்கொலை
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நிறுத்த முடியாததால், ஏற்பட்ட மன இறுக்கத்தால், தற்கொலை செய்து கொண்டார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின், "சுவிஸ் டெலிகாம்' நிறுவன உரிமையாளர், கார்சன் ஸ்லோடர், 49. அவரது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, போலீஸ் அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான, "சுவிஸ் டெலிகாம்' நிறுவனத்தை துவங்கிய கார்சன் ஸ்லோடர், திறம்பட நடத்தி வந்தார். தொழில் முறையில் வெற்றி கண்ட இவர், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்றி இருந்தார். இதன் காரணமாக ஸ்லோடர், தன் மனைவியை, 2009ல் விவாகரத்து செய்தார்; தன் மூன்று பிள்ளைகளிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். விவாகரத்துக்கு முன், திறந்தவெளி மைதானங்களில் ஆடும் விளையாட்டுகளில், அதிக ஆர்வம் காட்டி வந்த அவர், விவாகரத்துக்குப் பின், தன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை அறவே மறந்தார். எப்போதும், ஸ்மார்ட் போனிலேயே தன் கவனத்தை மூழ்கடித்தார். இதனால் அவர், அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தார். இந்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்பட்டால் ஏற்பட்ட மன இறுக்கத்தால், ஸ்லோடர், தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு, அறிக்கை வெளியிட்டு உள்ளது. தொழிலதிபர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் பலரும், ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், அதை குறைத்துக் கொள்ளுமாறு, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment