Header Ads



வீதி விபத்தில் பள்ளிவாசல் முஅத்தின் வபாத்

(சுலைமான் றாபி) 

இன்று (27.07.2013)  காலை 6.26 மணியளவில் நிந்தவூர் பிரதான வீதி (பழைய மக்கள் வங்கிக்கு முன்னால்)  இடம்பெற்ற வீதி விபத்தில் நிந்தவூர் மஸ்ஜிதுல் பாலாஹ் பள்ளிவாசலின் முஅத்தினாக  கடமை புரிந்த எம்.எம். சரீப் (69) (சரீப் மோதின்) அவர்கள் வாபாத்தானார். 

விபத்து இடம்பெற்ற நேரம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை  அங்கு வாபாத்தானதாக அறியமுடிந்தது. தற்போது மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை வைத்தியசாலையில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாசாவினை வெளியில் கொண்டுவர அரசியல் வாதிகளும், சமூக ஆர்வலர்களும் அதீத பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும்  இன்னும் ஜனாசா குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்தார். 

இதேவேளை வபாத்தான முஅத்தின் அவர்கள் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பள்ளிவாசல் பரிபாலனக்கடமையினை செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். 

3 comments:

  1. Innalillahi wainnailaihi rajioon.
    Abu Hiras

    ReplyDelete
  2. إنا لله وإنا إليه راجعون

    ReplyDelete
  3. innalillahi wainna ilaihi rajioon

    ReplyDelete

Powered by Blogger.