அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக்குழு (முழு விபரம் இணைப்பு)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்தியசபைக் கூட்டம் சென்ற 26.08.1434 (06.07.2013) சனிக்கிழமைக் காலை ஹோட்டல் ரன்முத்துவில் அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி முப்தி தலைமையில் நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக நடந்தேறிய இக்கூட்டத்திற்கு நாட்டின் எல்லா மாவட்டங்களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முதற்கட்ட நிகழ்ச்சியாக தலைவர் உரை, பொதுச் செயலாளர் செயற்பாட்டறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டதுடன் அவ்வமர்வு முடிவுற்றது.
இரண்டாம் அமர்வு தற்காலிகத் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களின் நடைபெற்றது. அவ்வமர்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அத்தேர்வு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்றமையும் முன்னால் உறுப்பினர்களே தெரிவானதும் விசேட அம்சமாகும். எந்தவொரு போட்டியோ மாற்றுக் கருத்தோ இல்லாமல் நடந்து முடிந்த தேர்வையிட்டு கலந்துகொண்டோர் யாவரும் பூரண திருப்தியை வெளிப்படுத்தினர். அத்தேர்வின் போது பின்வருவோர் நடப்புவருட நிர்வாக சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் விபரம் பின்வருமாறு:
1) அஷ்-ஷைக் எம்.ஐ. முஹம்மத் ரிஸ்வி முப்தி தலைவர்
2) அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக் பொதுச்செயலாளர்
3) அஷ்-ஷைக் ஏ.எல். முஹம்மத் கலீல் பொருளாளர்
4) அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் உப தலைவர்
5) அஷ்-ஷைக் ஏ.எல். முஹம்மத் றிழா உப தலைவர்
6) அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா உப தலைவர்
7) அஷ்-ஷைக் எம்.எச். முஹம்மத் புர்ஹான் உப தலைவர்
8) அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் உப தலைவர்
9) அஷ்-ஷைக் எம்.எஸ். முஹம்மத் தாஸிம் உப செயலாளர்
10) அஷ்-ஷைக் எம்.எம். முஹம்மத் முர்ஷித் உப செயலாளர்
11) அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் றஹ்மான் உப பொருளாளர்
12) அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூசுப் கௌரவ உறுப்பினர்
13) அஷ்-ஷைக்; எச். உமர்தீன் கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் எஸ்.எல். முஹம்மத் நவ்பர் கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம். அப்துல்லாஹ் கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி,ஏ.எஸ். சுப்யான் கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் ஜ. எல். முஹம்மத் ஹாஷிம் சூரி கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர் கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் முஹம்மது அலியார் கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் எஸ்.எம். முஹம்மத் ஜுனைத் கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் ஏ.எம். அப்துல் அஸீஸ் கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் யூசுப் நஜ்முத்தீன் கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் எம்.எச். முஹம்மத் இப்றாஹிம் கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எச்.எம்.எஸ்.ஏ. முஹம்மத் சித்தீக் உறுப்பினர்
25) அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி கௌரவ உறுப்பினர்
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
Post a Comment