பொதுபல சேனாக்களுக்கு ஒரு திறந்த மடல்..!
(Ash Sheikh Al Hafi MZM Shafeek)
இனவாதத்தைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி ஒரு சமூகத்தை அடக்கியாழத் துடித்த எவரும் உலக வரலாற்றில் வெற்றி பெற்றதாய் சரித்திரமே இல்லை. அப்படியானவர்களின் பெயர்கள் சமூகத்தில் உற்சரிக்கப்படுகையில் காரி உமிழ்வதையே மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
நீரும் உமது ஏனைய உயர்மட்டத் தலைவர்களும் நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தொடராக நிகழ்த்தப்பட்டு வருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்பு, கடையுடைப்பு, வியாபார கல்வி கலாச்சார நடவடிக்கைகளில் மண்ணை தூவுதல் உள்ளிட்ட அனைத்து காடைத்தனங்களிலும் நேரடியாகக் களத்தில் குதிக்கவில்லை என்பதைத் தவிர அவ்வனைத்து அநியாயங்களையும் திட்டமிடுவது, அப்பாவி சிங்கள வாலிபர்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்டு மிராண்டித்தனம் பண்ண பாதைக்கு இறக்குவது, முஸ்லிம் சமூகத்தை நாட்டில் முழுமையாக ஒதுக்கி நசுக்குவதற்கு நாடு பூராகவும் பிசாசுக் கூடங்களை நடாத்தி புழுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருப்பது என அனைத்து குழி பரிப்புகளையும் நீங்கள் தான் செய்து வருகின்றீர்கள் என்பதை இலங்கையை தாண்டி இப்போது உலகமே உணர அர்ரம்பித்துள்ளது.
நீர் முஸ்லிம்களுக்கு எதிராக யாரையும் தூண்டவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் நீரும் உமது "புழுகு பல சேனாவும்" அமெரிக்கா செல்லமுன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் பதட்டமான சூழ்நிலை இருந்து பின்பு அங்கே (அமெரிக்காவில்) நீர் ஒருமாதம் மாட்டு புரியாணி சாப்பிட்ட காலத்தில் இங்கே நாட்டில் பதட்டம் முழுமையாக அகன்று, திரும்பவும் நீர் நாடு வந்த மறுநாளே கேகல்லவில் கூட்டம் போட்டு கத்திய கையோடு முஸ்லிம்களுக்கு எதிரான அராஜகங்களும், பதட்டமும் மீண்டும் ஆரம்பமாகி இன்று அது விகாரமுகம் எடுத்து கொதிநிலையை நெருங்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இவ் அநியாயங்களுக்காக உம்மைத் தவிர வேறு யாரின் பக்கம் விரல்களை நீட்டலாம் என்கின்றீர்கள்..??
ஆம் உம்மோடு இன்னும் சிலரும் இதில் பங்காளிகளாக திரைக்குப் பின் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நாட்டுக்கு உள்ளேயும் , வெளியேயும் உள்ள மிகவும் உயர் மட்டத்தினர். அவர்கள் எழுதும் திரை வசனங்கள்தான் உங்களால் சூடேற்றப்பட்டு அப்பாவி சிங்கள இளைஞர்களால் நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. துரதிஷ்ட வசமாக அவ்இளம் நடிகர்கள் புது முகங்களாக இருப்பதால் நடிப்பின் போது அளவுக்கதிகம் உணர்ச்சி வசப்பட்டு சொதப்பி உங்களைக் காட்டிக் கொடுத்து விடும்படியான ஏதாவது தடயங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நோன்பு மாதம் முஸ்லிம்கள் தொழுது, அழுது இரவு விழித்து உங்கள் அராஜகங்களுக்கு எதிராக விடுகின்ற கண்ணீர்த் துளிகளும், சாபமும் உங்களை சும்மா விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கும், எங்களுக்கும் முழு மனித சமூகத்துக்கும் பொதுவாக அனுப்பப்பட்ட அன்பு நபி முஹம்மத் (ஸல் ) அவர்களின் ஒரு கடின எச்சரிக்கை இலங்கை முழுவதும் தற்போது மிக பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
அதுதான் - اتق دعوة المظلوم فانه ليس بينها وبين الله حجاب - "அநியாயமிழைக்கப் பட்டவனின் சாபத்தைப் பயந்துகொள். ஏனெனில் அச்சாபத்துக்கும் இறைவனுக்கும் இடையே எத்திரையும் கிடையாது" என்பதாகும். புத்தரும் அநியாயத்துக்கு எதிராகப் போராடியிருக்க காவி உடைக்குள் இருந்து கொண்டு நீங்கள் ( சில சிங்கள பல சேனாக்கள் ) ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று வினாத் தொடுத்தால் காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. முடியுமான அளவு இன்னும் பொறுமை காத்து அடக்கி வாசிக்குமாறே நாட்டு முஸ்லிம்கள் அவர்களின் ஆத்மீக, அரசியற் தலைமைகளால் வழிகாட்டப்படுகிறார்கள். என்றாலும் 5 அடி வரை மேலே குதித்துக் கொண்டிருக்கும் உங்கள் பல சேனாக்கள் 8 அடியைத் தாண்டுவார்களாயின் நாட்டில் முஸ்லிம் பல சேனாக்கள் உருவாவதை தடுப்பதில் முஸ்லிம் தலைமைகள் தோற்றுப் போகக்கூடும் என்ற கசப்பான உண்மையை புரிந்து கொள்ளத் தவறாதீர்கள்.
ஒரு வேலை அதுவே உங்கள் தேவையாக இருப்பின் அது நீங்கள் புரிந்த மிகப் பெரும் வரலாற்றுத் தவறாக இலங்கை சரித்திரத்தில் உலக முடிவு நாள் வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும்.
அத்தோடு உங்கள் அராஜக வண்டி உடன் நிறுத்தப்படாதவிடத்து எதிர் வரும் மாதங்களில் அமெரிக்காவில் வெளிவரவுள்ள டைம்ஸ் சஞ்சிகைகளின் முன் அட்டைப் படத்தில் நீங்கள் இரத்தத்துக்காக ஆயுதம் தரித்த நிலையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் சென்றடைவதை நாம் யாருமே தடுத்து நிறுத்த முடியாமல் போகுமோ என்ற கவலையும் எம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆகவே சிந்தித்து செயற்படுமாறு உங்களை மீண்டும் அழைத்துப் பார்க்கிறோம். செவிடு போல் இருப்பதும், செவிசாய்ப்பதும் உங்களைப் பொறுத்ததே...!!
For whom this letter? You are writing to Muslim or BBS ha?
ReplyDeleteசகோதரரே உங்க கடிதத்துக்கு எமது வாள்துக்கள்.
ReplyDeleteஇந்த கடிதத்தை கடும்போக்குவாதிகள் கண்டுகொள்ள மாட்டார்களே...
முடியும் என்றால் தயவு செய்து நீங்கள் சென்று bbs உடைய காதிலே சொல்லுங்களே ...
இதில் நாங்கள் மட்டும் வாசித்து ஒரு பயனுமில்லை,விஷயம் தெரிய வேண்டியவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்து அனுப்பி வைத்தால் மிச்சம் நல்லது.
ReplyDeleteஅசாத் சாலியின் கருத்துக்களுக்கும் உங்களது சொல்லாடலுக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை.அவராவது முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டி தனது அரசியலில் ஹீரோ ஆக முனைகின்றார். நாமும் பல சேனாக்களை உருவாக்குவதாக மிரட்டலாம், அதட்டலாம் ஆனால், எமது எதிர்வு கூறல்கள் பிழைக்கும் இடத்து, இதன் பின் விளைவுகள் பற்றி சிந்தித்தாக வேண்டும். பிரபாகரன் தமிழ் சமூகத்தை பிழையான வழியில் இட்டுச் சென்றதன் பின் விளைவுகளை நாடே அனுபவித்துவரும் இன்றைய சூழலில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தையும் வெளிநாட்டு முஸ்லிம் பெயர் தரித்த அடிப்படை குழுக்களது போக்குக்குள் செலுத்த முனைய வேண்டாம்.
ReplyDeleteமாறாக, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான மார்க்கம் அல்ல என்பதனையும் நபி (ஸல் ) அவர்களது அந்நிய மக்களுடனான உறவுமுறைகள் எவ்வாறான அழகிய முறையில் அமைந்திருந்தன என்பதையும் சமூகத்துக்கு அறிவுறுத்துவதன் மூலம் எமது நடைமுறை வாழ்வியலை அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
செய்பவன் சொல்லிவிட்டுச் செய்யமாட்டான். குரைக்கிற நாய் கடிக்காது என்பது முது மொழி.
Bro. Well articale some muslim politicians also they want to. Know what going on srilanka might be this artical helpul for them. I hope.
ReplyDeleteType in singhala and post pls
ReplyDeleteஅஷ்ஷெய்க் ஹனீபா மதனி.அஷ்ஷெய்க் அல் ஹாபீ mzm.ஸபீக் இவர்களைப் போண்று தைரிம் யாருக்குத்தான் வரும் மாஷாஅல்லாஹ் எங்களின் பிராத்தனை எப்போதும் உங்களுக்கு இறைவன்துனைஎண்றும் ஆமீன்
ReplyDelete