மாகாண தேர்தல்களில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்
நடைபெறவிருக்கும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களின்போது வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கென ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தல்களின்போது தேர்தல்கள் திணைக்களம் மூலம் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை 2012 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்புக்கு அமைய மீள செல்லுபடியாக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவைகளில் ஒன்றை வாக்களிப்பு நிலையத்தில் தமது ஆளடையாளத்தை நிருபிப்பதற்காக ஒவ்வொரு வாக்காளரினாலும் சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயத் தேவையாகும்.
மேற்குறித்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இதற்கான விண்ணப்பங்கள் கிராம சேவை உத்தியோகத்தர்களால் 2013.09.03 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்களிப்பு நிலையங்களில் எல்லாம் நல்ல விதமாக நடைபெற்றாலும் வாக்கெண்ணும் நிலையங்கள் தானே தெரிவாகும் உறுப்பினர்களை நிர்ணயம் செய்வதாக வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteகடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வின்சென்ட் மகளிர் கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் இரவு ஒரு மணி வரை ஆளுந்தரப்பில் முண்ணனி தெரிவு வாக்கைப் பெற்றிருந்த அமீரலி, அதன் பின் திடீரென பிள்ளையான் முதலாம் இடத்திற்கு வந்து அமீரலி இரண்டாம் இடத்திற்கும், அலி சாஹிர் மௌலானா தெரிவாகாமலே பேனதும் எப்படியென்று இன்னமும்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன் கனம் தேர்தல் ஆணையாளர் அவர்களே!
தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திணைக்களம் விடுக்கின்ற அறிவிப்புக்களும், அறிவுறுத்தல்களும் கச்சிதமாகவே இருக்கின்றன. ஆனால் களத்தில் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. இதையெல்லாம் உங்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
எதிர்வரும் மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலாவது இந்த கேவலமான வரலாறு மாறுவதற்கு நீங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பீர்களா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-