Header Ads



எகிப்துக்கு சவூதி அரேபியாவும், எமிரேஸும் அள்ளிக்கொடுக்க தீர்மானம்

கடந்த 2011ஆம் ஆண்டில் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்ட நாள் முதலே, பொருளாதார முரண்பாடும், அரசியல் நிலையாமையும் அங்கு இருந்து வந்தன.இப்போதைய அதிபர் முகமது மோர்சியையும் ராணுவம் பதவியிலிருந்து இறக்கியது. மோர்சியும் பதவியிலிருந்து இறக்கப்பட்டவுடன் சவூதி அரேபியா அதனை வரவேற்றது. 

இடைக்கால அதிபருக்கு அரசர் அப்துல்லா முதல் அயல்நாட்டுப் பிரதிநிதியாக வாழ்த்து சொன்னார். மேலும், இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவும் விதமாக 5 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது. 

இந்த உதவி, சவுதியின் அரசர் அப்துல்லா முடிவு செய்தபடி, 2 பில்லியன் டாலர் வட்டியில்லா முதலீடாக அந்நாட்டின் மத்திய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கப்படும். மீதி, 2 பில்லியன் டாலருக்கு ஈடாக எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் உதவியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபுக் குடியரசு நாடும் , ஒரு பில்லியன் டாலர் தொகை வட்டியில்லாமலும், 2 பில்லியன் டாலர் எகிப்தின் மத்திய வங்கியில் முதலீடாகவும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்விரண்டு நாடுகளும் சேர்ந்து எகிப்திற்கு அளிக்கும் மொத்த உதவித்தொகை 8 பில்லியன் டாலர் ஆகும். எகிப்து நாட்டின் பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்காகவே இந்த உதவி வழங்கப்படுவதாக, சவுதியின் பொருளாதார அமைச்சர் இப்ராகிம் அல் அசப் தெரிவித்தார்.

4 comments:

  1. But, they did not help when Mursi is in power..??

    ReplyDelete
  2. முர்சியின் ஆட்சிக்காலத்தில் ஏன் இந்த உதவிகள் செய்யப்பட வில்லை

    ReplyDelete
  3. SAUDI & UAE are the enemies of Muslim brotherhood party in Egypt. They, the kings & princes in these countries do not like a Muslim Egypt as Mursi was the first elected president in Egypt. Only Qatar supported for Mursi..This is the double standard of Saudi King Abdullah and UAE president..No difference among politicians anywhere in the world.

    ReplyDelete
  4. Yoodarhalukkum nasaarakkalukkum tunai ponaal ?!?!? Arabu ? Naaduhal matrumalla mulu ulahamum udawi seyyum islaamiya muraippadi arasiyal seydaal arabu naaduhal utpada anaiwarum por ( war ) seywaarhal ???!!! $$$$$$$$$$$$ o muslime unakku Allah thewaya ind naasahaara yooda nasaarakkal thewaya ???? $$$$$$$$$$$$$$$$?????? Iwangalukku padil solla wiraiwil waruwaarhal MAHDI alaihissalam And EISA alaihissalam appodi inda yooda kirustu meylum awarhalin bommaihalukku saawu manitaan

    ReplyDelete

Powered by Blogger.