Header Ads



'யாழ்ப்பாணத்தில் தொழிலின்றி இருக்கும் முஸ்லிம்களுக்கு உதவிகளை வழங்குங்கள்'

மீள் குடியமர்வின் பின்னரும் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு நோன்புக் காலத்திலாவது மனிதாபிமான உதவிகளை வழங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று யாழ். மக்கள் பணிமனை தலைவர் மௌலவி எஸ்.சுபியான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஜே/81 தொடக்கம் 88 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட 6 மாதத்துக்குரிய நிவாரணமும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முஸ்லிம் மக்களுக்கான நோன்புக் காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதால் தொழில் வாய்ப்பற்றுள்ள குடும்பங்கள் தமது நோன்பைக் கூட சரியான முறையில் கடைப்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அந்த மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகளை  வழங்க முன்வர வேண்டும். தொடர்ச்சியான மத முறைமைகளின்படி நோன்பைக் கடைப்பிடிக்க இந்த உதவிகள் கைகொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. நோன்பு வருகின்றது, நீங்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றீர்கள் என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றீர்கள் போலும். உலர் உணவு வழங்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றீர்களே, அப்படியொரு திட்டம் நிறைவடைந்து இன்றைக்கு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துவிட்டதே. ஏன் அதை இப்போது தெரிவிக்கின்றீர்கள்? சமுர்த்தி உதவித்திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உதவித்திட்டங்கள் கிடைக்கின்றனவே. தொழில் வாய்ப்பற்ற குடும்பங்கள் என நீங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள். அன்மையில் யாழ் மாவட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன, சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கல்வி, சுகாதார, விவசாய சிற்றூழியர்கள் என பலருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டனவே அதன்போது மௌனம் காத்துவிட்டு இப்போது என்ன தர்மத்தில் பேசுகின்றீர்கள்? உங்களின் சிபாரிசில் நவாந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு மாநகர சபையில் வேலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஒருவருக்கு அல்ல. இப்படி வாய்ப்புகளை நழுவவிட்டு. என்ன றமழான் காலத்தை வைத்து எமது சமூகத்தை காட்டி ஹதியா கேட்கவா முன்வந்திருக்கின்றீர்கள். என்ன மௌலவி இன்னமும் நீங்கல் திருந்தவில்லையே!!!

    ReplyDelete

Powered by Blogger.