Header Ads



பாகிஸ்தானில் மழையில் நனைந்து நடனம் ஆடிய சகோதரிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில், மழையில் நனைந்து நடனம் ஆடிய சகோதரிகளை, ஆயுததாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமிகள் ஆடும் காட்சிகள், இணையதளத்தில் வெளியரனதைப் பார்த்த ஆயுததாரிகள்   அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள, சிலாஸ் என்ற இடத்தில், ஆறு மாதங்களுக்கு முன், தங்கள் வீட்டின் வெளியே, மழையில் நனைந்தபடி, ஆடிப் பாடிய, நூர் பஸ்ரா, 15, நூர் ஷேசா, 16, என்ற இரு சிறுமிகளின் படங்கள், இணையதளத்தில் வெளியாகியிருந்தன. அந்தக் காட்சிகளில், மழையில் நனையும் அச்சிறுமிகள், பாரம்பரிய உடைகளை அணிந்தபடி, சிரித்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்தக் காட்சிகளைப் பார்த்த, ஆயுததாரிகள்  , நேற்று முன்தினம், சிறுமிகளின் வீட்டுக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டுக்குள் திடீரென ஆயுததாரிகள்  அந்த சிறுமிகளை நோக்கி, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்று வெளியேறியுள்ளனர். முன்னதாக, சகோதரிகளை சரியாக வளர்க்கத் தவறியதாக, அவர்களின் சகோதரச் சிறுவனை, ஆயுததாரிகள் கண்டித்துள்ளனர்.

1 comment:

  1. இது பாகிஸ்தான் இவர்களை தான் நாம் போற்றி புகழ்கின்றோம்,சிறுவர் என்று சரி பர்கமட்டர்ர்கள் சுட்டு போடுரங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.